top of page
  • Kirupakaran

விடாமுயற்சியின் வல்லமை



மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் மெதுவாக ஓடுவார்கள். ஓட்டத்தில் அவர்களின் ஆற்றலை அதிகரிக்க பல உபசரிப்புகளை வழங்குவார்கள். கவனித்துப் பார்த்தால் சிலர் கொடுத்த அனைத்தையும் எடுக்காமல் இருப்பர். சிலர் தண்ணீரையும், சிலர் ஆற்றலை அதிகரிக்க மிகக் குறைவாக சிறிது குளுக்கோஸையும் எடுத்துக்கொள்வார்கள். முதல் முறை ஓடும் வீரர்கள், கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வதில் உற்சாகமாயிருந்து, முழுமையாகக் குடித்து மாரத்தானை முடிக்க முடியாமல் போய் விடுவார்கள்.


கிறிஸ்துவுக்குள்ளான நம் ஓட்டத்தை, இராணுவ ஒழுக்கத்தோடு விடாப்பிடியாக ஓடும் ஒரு ஓட்டப்பந்தய வீரருக்கு பவுல் ஒப்பிடுகிறார். எபிரேயர் புத்தகம் இந்த பந்தயத்தை எப்படி ஓட வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகிறது.


உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். எபிரேயர் 6:12


விடாமுயற்சி என்றால் என்ன? இது கவனமான, விடாப்பிடியான வேலை அல்லது முயற்சியைத் தவிர வேறில்லை. ஒரு மாணவர் விடாமுயற்சி மற்றும் பயிற்சியின் காரணமாக தேர்வில் தேர்ச்சி பெற்றார், விடாமுயற்சி மற்றும் ஒழுக்கத்துடன் ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றார்கள் என்றெல்லாம் வாசிக்கிறோம். ஆகவே, கிறிஸ்துவுடனான நமது நடையில், எல்லாவற்றையும் விட விடாமுயற்சி முடிவு பரியந்தம் மிக முக்கியமானது. அதனால் கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை பரிபூரண நிச்சயமாகும். இந்த விடாமுயற்சி எனக்கு 1 வருடமாக இருக்கிறது, அது போன பிறகு கிறிஸ்துவின் மீதுள்ள இந்த நம்பிக்கையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்ல முடியாது. நம் சுவாசத்தின் முடிவு பரியந்தம் இதை வைத்திருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது - “முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று”.


நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, இந்த விடாமுயற்சியை இறுதி வரை தக்கவைப்பது எது?

 

விடாமுயற்சியின் வேர் அன்பு

  • நமது கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம் போன்றது, அதே விடாமுயற்சியை முடிவு பரியந்தம் காட்ட அழைக்கப்பட்டுள்ளோம். நாம் காட்டும் விடாமுயற்சி நம் சுயத்தின் மீது இல்லாமல், கிறிஸ்துவின் மீது இருக்க வேண்டும். நம் நம்பிக்கை நம் சுயத்தின் மீது இல்லாமல் கிறிஸ்துவின் மீது இருக்க வேண்டும்.

  • நாம் தேவன் மீது விசுவாசம் வைக்கும்போது, இயேசு தம்முடைய அன்பை நமக்குத் திருப்பித் தருகிறார், அந்த அன்பில் நாம் கிறிஸ்துவில் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம். மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:38,39

  • கிறிஸ்துவின் அன்பு அவரிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாததாக ஆக்குகிறது. கிறிஸ்துவில் நாம் காண்பிக்கும் விடாமுயற்சியின் வேர் இதுதான்.

  • கிறிஸ்து நம்மில் வைத்த அன்பின் நிமித்தம் நாம் அவரில் அன்பு கூறுகிறோம். அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். 1 யோவான் 4:19

  • நம்மை மட்டுமே நேசிக்கும்படி இயல்பிலேயே நாம் சுயநலவாதிகள் தான்.  ஆனால் இயேசு சிலுவையில் தன்னைப் பலியிட்டதின் மூலம் இந்த சாபத்தை முறியடித்தார். சிலுவையில் காட்டப்பட்ட அன்பு கிறிஸ்துவில் நேசிக்க நமக்குள் எரிபொருளாக செயல்படுகிறது. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான்  3:16

 

விடாமுயற்சியின் வேர் விசுவாசம்

அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். எபிரெயர் 6:19-20

  • கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள இந்த விசுவாசம் ஆத்துமாவிற்கு நங்கூரம் போன்றது, “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது”.

  • இந்த விசுவாசமானது, கடலில் எந்தக் காற்றோ, அதிக அலையோ வீசினாலும் அதே இடத்தில் கப்பலை நிலைநிறுத்துகிற கப்பலின் நங்கூரம் போல் செயல்படுகிறது.

  • நாம் இயேசுவில் விசுவாசம் வைத்தவுடன், அவர் என்ன செய்கிறார் என்றால், அவர் தம்மையே நம் "ஆத்துமாவுக்கான நங்கூரம்" ஆக்குகிறார். நமது ஆத்துமா அவருடன் கட்டப்படுகிறது, அவர் அதை விடமாட்டார். கட்டப்பட்டவுடன், அது உறுதியாகவும் அவரது கைகளில் பாதுகாப்பாகவும் இருக்கிறது. எதிரி என்ன திட்டமிட்டாலும், அதை தேவனிடமிருந்து எடுக்க முடியாது. இயேசு மீதான விசுவாசம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது, “உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது”.

  • விசுவாசம் வைக்கும்படி இயேசு நம்மை வற்புறுத்துவதில்லை. நம் இருதயத்திலிருந்து அவரை விசுவாசிக்கும் நம் செயல்தான் இந்த நம்பிக்கையை அவருக்குள் வரச் செய்கிறது.

  • இந்தக் கிரியையை செய்ய தேவன் பல கடந்தகால சாட்சிகளையும், நம் வாழ்க்கைப் பாடங்களையும், நம்மிலும் ஊழியக்காரர்கள் வாழ்க்கையிலும்  விசுவாசத்தை வலுப்படுத்தப் பயன்படுத்துகிறார். தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். எபிரேயர் 13:7

  • விசுவாசம் இல்லாமல் தேவனைத் தேடுவதும் அவரைப் பிரியப்படுத்துவதும் சாத்தியமற்றது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரேயர் 11:6

 

சோம்பல் பற்றிய எச்சரிக்கை / கீழ்ப்படிதல் மீதான அழுத்தம்

கிறிஸ்துவில் விடாமுயற்சியைத் தடுக்கும் பல விஷயங்கள் உள்ளன.

கிறிஸ்துவில் விடாமுயற்சியிலிருந்து நம்மைத் தடுக்கும் மற்றும் வீழ்ச்சியடையச் செய்யும் இரண்டு விஷயங்கள்.

1.   நமக்குள் இருக்கும் சோம்பல். சோம்பேறித்தனத்தால் தேவன் நம்மைச் செய்ய அழைப்பதைச் செய்யாமல் இருப்பதற்கு சாக்குப்போக்குகளைக் காண்கிறோம்.

2.   கீழ்ப்படியாமை என்பது கிறிஸ்துவில் நமது விடாமுயற்சியைத் தடுக்கும் மற்றொரு முக்கியமான காரணியாகும். அது அவருடைய திட்டங்களை நிறுத்தி, நம் வாழ்க்கையில் நம்மை மாற்றுப்பாதையில் செல்ல வைக்கிறது. பல சமயங்களில் வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்தித்த பின்னரே இதை உணர்ந்து கொள்கிறோம். சாத்தான் இதைப் புரிந்து கொள்ள விடாமல் ஜனங்களின் கண்களையும் காதுகளையும் மறைப்பதால், பலர் வாழ்க்கையின் இறுதி வரை உணர மாட்டார்கள்.

 

சோம்பல்

  • நம்முடைய பணி கிறிஸ்துவால் நமக்காக செய்யப்படுகிறது. அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலம் இது நிகழ்கிறது. ஆனால், முன்னேறி செல்வதற்கு 100% முயற்சியைக் கொடுக்க நம் பலத்தில் கடினமாக உழைக்காமல் இருப்பதில் இருந்து அது நம்மைத் தடுக்காது. நாம் செய்ய அழைக்கப்பட்டவற்றிற்கு நாம் சோம்பேறியாக இருக்க முடியாது. நாம் என்ன செய்ய அழைக்கப்படுகிறோமோ அதை 100% செய்ய வேண்டும். தேவன் எனக்காக நிறைவேற்றுவார் என்று கூறிக் கொண்டு நாம் அமர்ந்திருக்க முடியாது. உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். எபிரேயர் 6:12

  • உங்களில் இருக்கும் சோம்பலின் ஆவியிலிருந்து விடுபடுவதற்கு தேவனின் உதவிக்காக ஒவ்வொரு நாளும் அதிகமாக ஜெபியுங்கள். சோம்பலின் ஆவி அசதியாக இருக்கச் செய்யும். சோம்பலின் ஆவி சாத்தானிடமிருந்து வருகிறது, இது ஒருவரை மகிழ்ச்சியாக உணர வைக்கிற ஒரு வஞ்சிக்கும் ஆவி. ஆனால் விரைவில் இந்த மகிழ்ச்சி உங்களுக்கான தேவனின் ஆசீர்வாதத்தைப் பறித்துவிடும்.

  • தாலந்துகள் உவமை பற்றிய விளக்கத்தில், பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே" என்று இயேசு சோம்பேறித்தனத்தைக் கடிந்துகொண்டார். எனவே உங்களில் உள்ள சோம்பலை அகற்றி, தேவனின் எதிர்பார்ப்புகளுக்கு கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள். அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. மத்தேயு 25:26

 

கீழ்ப்படிதல்

  • தேவன் எதையாவது செய்யச் சொன்னால், உடனே அதற்கு கீழ்ப்படியுங்கள். வேறொரு நாளுக்கு ஒத்திவைக்காதீர்கள், உங்களுக்கும் எனக்கும் அவர் திட்டமிட்ட வாக்குறுதிகளைப் பெறுவதற்கு உடனடியான கீழ்ப்படிதல் முக்கியமானது.

  • நம் தேவன் முடிவு முதல் ஆதி வரை செயல்படும் தேவன். அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, ஏசாயா 46:10 

  • அதேசமயம், மனிதர்களாகிய நாம் எதிர்மாறாக ஆரம்பம் முதல் இறுதி வரை செயல்படுகிறோம். ஆனால் தேவன் இலக்கை அறிவார். நம்மை இலக்கை அடையச் செய்ய அவர் படிப்படியாக செயல்படுகிறார். அவர் தமது ராஜ்யத்திற்கு வரும்போது நம் ஒவ்வொருவருக்கும் இதைச் செய்ய விருப்பம் உள்ளவர்.

  • வேலையோ அளவோ ஒரு பொருட்டல்ல. ஆனால் எந்த சோம்பலும் இல்லாமல் வேலைக்கு கீழ்ப்படிவதுதான் அவருக்கு முக்கியம். அவர் திட்டமிட்டதை நாம் பெறுகிறோம், அவருடைய சித்தத்தை நாம் பூர்த்தி செய்கிறோம்.

  • தேவன் ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலியிடச் சொன்னபோது, அவர் உடனடியாக  அவருக்கு கீழ்ப்படிந்து ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்றார். ஆபிரகாமுக்கு ஒரே ஒரு குமாரன் இருப்பதையும், அதுவும் நீண்ட காலத்திற்குப் பிறகு அவரது முதுமையில் அவருக்குப் பிறந்தது என்பதையும் தேவன் அறிவார். தேவன் அவருடைய கீழ்ப்படிதலையும் அன்பையும் சோதிக்க விரும்பினார். மேலும், ஆபிரகாம் தம் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைக் காண விரும்பினார். அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 22:2,8-12

  • ஆபிரகாமின் கீழ்ப்படிதலுக்கு தேவன் என்ன செய்தார் என்றால், தலைமுறை தலைமுறையாக அவர் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். மனிதகுலம் பாவத்திலிருந்து விடுபட உதவுவதற்காக தேவன் தமது ஒரே குமாரனான இயேசுவை அவரது தலைமுறையின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுத்தார். ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; மத்தேயு 1:1-2

 

கிறிஸ்துவில் விடாமுயற்சியின் விளைவு

  • ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை என்ற தேவனின் வாக்குத்தத்தம் ஒரு கோட்டை போன்றது. மீற முடியாத பாதுகாப்பானது. "... நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே". எபிரேயர் 13:5

  • தேவன் ஆபிரகாமை ஆசீர்வதிப்பதாக வாக்களித்தபோது அவர் தமது பேரிலே ஆணையிட்டார். ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு: எபிரெயர் 6:13

  • அந்த வார்த்தைகள் ஆதியாகமம் 22 இல் வாசிக்கப்படுகிறது.

  • கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், ஆதியாகமம் 22:15-17

  • தேவன் நமக்கு அளிக்கும் வாக்குத்தத்தம், நாம் அவருக்காக செய்யும் செயலிலிருந்து வெளிப்படுகிறது. இது கீழ்ப்படிதலுக்குத் திரும்புகிறது. நாம் சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட வேண்டும்.

  • தேவன் ஆபிரகாமிடம் நேரடியாக பேசினார். நம் நாட்களில் அவர் தேவனுடைய வார்த்தையின் மூலமாகவும் பரிசுத்த ஆவியின் மூலமாகவும் நம்மிடம் பேசுகிறார். அவர் நம்மை ஏதாவது செய்யச் சொன்னால், வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு கீழ்ப்படிவோம்.

  • கிறிஸ்துவில் இந்த விடாமுயற்சியைப் பெறுவதற்கான நமது ஆற்றல், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையைப் (வேதம்) படிப்பதன் மூலமும், ஜெபத்தில் அவரைத் தேடுவதன் மூலமும் வருகிறது. அவரது திட்டங்களையும் வழிநடத்துதல்களையும் புரிந்து கொள்ள நாம் அவருடன் நேரத்தை செலவிட வேண்டும். இது ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் தனியாக ஓடு பாதைகளில் ஓடிப் பார்த்து தன்னிடம் உள்ள பிட்ஸ்டாப்களில் (PITSTOP) இருந்து தினசரி ஆற்றலைப் பெறுவது போன்றது.

  • நம் தேவன் என்றென்றும் மாறாதவர். முடிவு பரியந்தம் ஓடுவதற்கான உறுதியை நமக்குத் தருகிறார், உங்கள் வழியில் வரும் போராட்டங்களால் சோர்வடைய வேண்டாம். அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எபிரேயர் 13:6,8

 

 

bottom of page