top of page
  • Kirupakaran

புதிய விசுவாசிகளுக்காக ஜெபிப்பது எப்படி?


எப்படி ஜெபிக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். உபவாசமிருந்து ஜெபிப்பது எப்படி என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். நமது ஜெபத்தை வலுப்படுத்தும் ஒரு விஷயம் என்னவெனில், நமது தேவைகளின் அடிப்படையில் குறிப்பாக இருக்க வேண்டும். பிறருக்காக ஜெபிக்கும்படி நாம் அடிக்கடி கேட்கப்படுகிறோம். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரு புதிய விசுவாசிக்காக அல்லது விசுவாசத்தில் பலப்படுத்தப்பட விரும்பும் ஒருவருக்காக எப்படி ஜெபிக்க வேண்டும்? எபேசியர் புத்தகத்தில் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று பவுல் நமக்குக் கற்பிக்கிறார்.


எபேசியர் புத்தகம், சிறந்த நீதிமான்களாகக் கருதப்பட்ட எபேசு சபைக்கு எழுதப்பட்டது. மேலும் பவுலின் இந்த கடிதத்தின் நோக்கம் அவர்களுக்கு விரோதமாக வரும் ஆவிக்குரிய போர்களை எதிர்த்துப் போராடுவதற்கு, ஊக்கமளித்து அவர்களைப் பலப்படுத்துவதாகும்.வெளிப்படுத்தின விசேஷம் 2 ஆம் அதிகாரத்தில் எபேசு சபை குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். ஏழு சபைகளில் இந்த சபையே முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த தேவாலயத்தின் ஜனங்களைப் பரிசுத்தமாக்குகிறது மேலும் தேவன் அவர்களை உயர்வாகப் பார்க்கிறார். எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; வெளிப்படுத்தின விசேஷம் 2:1


புதிய விசுவாசிகளுக்காக எப்படி ஜெபிப்பது ?

ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், எபேசியர் 1:15-17


  • தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள் - யாரேனும் இயேசுவில் விசுவாசத்திற்குள் வருவதைக் கேட்கும்போது, அவர்களை கிறிஸ்துவின் விசுவாசத்திற்குள் கொண்டு வந்ததற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, எபேசியர் 1:15-16

  • தொடர்ந்து ஜெபத்தில் நினைவு கூருங்கள் - அவர்கள் விசுவாசத்தில் பலப்படுத்தப்படுவார்கள் என்று நினைத்து அவர்களுக்காக ஜெபிப்பதை நிறுத்திவிடாமல் நம் ஜெபங்களில் தொடர்ந்து அவர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சாத்தான் புதிய விசுவாசிகளை கிறிஸ்துவின் விசுவாசத்திலிருந்து பிரிப்பதற்கு, சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று தேடிக் கொண்டிருக்கிறான். "....என் ஜெபங்களில் உங்களை நினைத்து". எபேசியர் 1:16

  • கடந்த காலத்திலிருந்து பாதுகாக்க ஜெபியுங்கள் - அவர்கள் கடந்தகால வாழ்க்கையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெபியுங்கள். அவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் வரும்போது போராட்டங்கள் இருக்கும், இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் அவைகளிலெல்லாம் வெற்றிபெற தேவன் உதவுவார். ஆனால் சாத்தான் கடந்தகால வாழ்க்கை தற்போதையதை விட எப்படி சிறப்பாக இருந்தது என்பதை நமக்கு நினைவூட்டுவான். உலகப்பிரகாரமான வாழ்க்கையையும் கிறிஸ்தவ வாழ்க்கையையும் ஒப்பிட்டு பாவம் நிறைந்த கடந்த காலத்துக்கு கவர்ந்திழுப்பான். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான். 1 பேதுரு 5:8. அவர்கள் கடந்தகால வாழ்க்கைக்குத் திரும்பிப் போகாதபடி அவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். ஏசாயா 43:18

  • ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவிக்காக (பகுத்தறியும் ஆவி) ஜெபியுங்கள் - ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியைத் தரும்படி ஜெபியுங்கள். பகுத்தறியும் ஆவியின் ஞானம், அவர்கள் கஷ்ட காலங்களில் எப்படி நடக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்யும். மேலும் தேவனிடத்திலிருந்து என்ன வருகிறது சாத்தானிடமிருந்து என்ன வருகிறது என்பதைப் பகுத்தறிய உதவுகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், எபேசியர் 1:17

  • அவர்களின் இருதயம் தெளிவடைவதற்காக ஜெபியுங்கள் - அவர்களின் கண்கள் பார்க்க முடியாத, காதுகள் கேட்க முடியாத தற்போதைய சூழ்நிலையைப் பாதுகாக்க ஜெபியுங்கள். அப்பொழுது அவர்கள் முதிர்ச்சியடையாமல் இருக்கும்படி, சாத்தானால் தடுக்கப்பட்ட ஆவிக்குரிய பகுதிகளின் ஆழமான உண்மைகள் திறக்கப்பட்டு தேவனுடைய வசனம் அவர்களை சென்றடைகிறது. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; …… நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 1:18,19

    • எனவே, அவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது அப்போஸ்தலர் 26:18 இல் அவர் கோடிட்டுக் காட்டியபடி நம்மைக் காக்கிறார். அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர் 26:18

    • உதாரணமாக, எலிஷா எப்படி ஜெபித்தார் என்றும் அந்த ஜெபமானது இஸ்ரவேலின் ராஜாவும் அவனது ஆட்களும் குதிரைகள் மற்றும் இரதங்களின் சேனைகளால் சூழப்பட்டபோது அவர்களின் கண்களை திறந்ததையும் காணலாம். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார். 2 இராஜாக்கள் 6:15-18

  • அவருடைய சித்தத்தின்படி வழிகாட்ட ஜெபியுங்கள் - தேவனுடைய சித்தம் அவர்களுக்கு வெளிப்பட வேண்டி ஜெபம் செய்யுங்கள். ஒரு புதிய விசுவாசிக்காக தேவன் அநேக திட்டங்களை வைத்திருக்கிறார். புதிய விசுவாசி தேவனின் சித்தத்தைப் பெறுவதைத் தடுத்து அவர்களைத் தடம் புரளச் செய்வது தான் சாத்தானின் வேலை. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; எபேசியர் 1:18

  • தேவனின் வல்லமை வெளிப்பட ஜெபியுங்கள் - தேவனின் வல்லமை அவர்களிடம் வெளிப்பட ஜெபியுங்கள். அவரை விசுவாசிக்கும் நமக்கான அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன். இதுவும் அதே பலத்த வல்லமை தான். எபேசியர் 1:19 - New living translation (NLT).

நாம் ஜெபிக்கும்போது, பின்வரும் வல்லமைகளை நமக்குத் தருவதற்கு தேவன் கிருபை செய்கிறார்.

  • இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே வல்லமையை தேவன் புதிய விசுவாசிக்கும் கொடுப்பார். "தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி....", "அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து".எபேசியர் 1:19,21

  • சாத்தானின் அதிகாரத்தை முறியடிக்க உதவும் அதே வல்லமையை தேவன் புதிய விசுவாசிக்குக் கொடுப்பார் - எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக. எபேசியர் 1:20

  • நமக்கு எதிராக செயல்படும் சாத்தானின் அனைத்து அதிகாரங்களையும் உரிந்து போடுவதற்கு தேவன் வல்லமையைக் கொடுப்பார், சிலுவையில் அவர் செய்த தியாகத்தின் மூலம் இதைச் செய்கிறார். நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். கொலோசெயர் 2:14-15

  • சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போட தேவன் வல்லமை கொடுப்பார். சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். ரோமர் 16:20

  • இந்த விசுவாசி சபையின் சரீரமாக நிரப்பப்பட ஜெபியுங்கள் - நாம் ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்பட்டவுடன், நமது ஆத்துமாவானது, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற கிறிஸ்துவின், சரீரமாகிய சபையுடன் இணைக்கப்படுகிறது. நம் தினசரி வாழ்க்கையில், கிறிஸ்துவின் சரீரம் எப்படி இருக்கிறதோ, அது போல தேவன் நம்மைச் சுத்திகரித்து, நம்மை மேலும் ஆவிக்குரியவர்களாகவும் பரிசுத்தமாகவும் ஆக்கி அவருடைய திட்டமிடப்பட்ட நோக்கத்தை அடைய உதவுகிறார். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். எபேசியர் 1:23


புதிய விசுவாசிகளுக்காக ஜெபிப்பதில் மட்டுமின்றி, உங்களுக்கான ஆவிக்குரிய வளர்ச்சியைத் தேடுவதிலும் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்ற உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். நமது ஜெப வாழ்க்கையில் சிந்திக்கவும், நம் வாழ்வில் தேவனுடைய வேலையிலிருந்து வலிமையைப் பெறவும் இவை மதிப்புமிக்க அம்சங்களாக இருக்கின்றன.


bottom of page