top of page
  • Kirupakaran

இயேசுவுடன் காலை உணவு



இயேசு கிறிஸ்துவின் முதல் சீஷர்  பேதுரு என்பதை நாம் அறிவோம். அவர் இயேசுவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இருந்தும் அவர் இயேசுவை மறுதலித்தார். இயேசவுடனான அவரின் மீட்பின் கதை மற்றும் ஆரம்பகால அப்போஸ்தல சபையை  அமைப்பதற்கு அவரை எவ்வாறு தலைவராகப் பயன்படுத்தினார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆய்வில் நாம் பேதுருவின் வாழ்க்கைப் பாடங்களைப் பார்க்கலாம் : இயேசுவுடனான மீட்பு

 

இயேசுவுடன்  பேதுருவின் வாழ்க்கை

பேதுருவின் மீட்பின் அனுபவத்தைப் புரிந்துகொள்வதற்கு  முன், பேதுருவையும், அவரை இயேசு எவ்வாறு முதல்  சீஷராகத் தேர்ந்தெடுத்தார் என்பதையும், இயேசுவுடனான  அவரது தொடர்புகளையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.

  • பேதுரு சீமோன் பேதுரு என்று அழைக்கப்பட்டார் - அவர் ஒரு மீனவர்.

  • செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரது கூட்டாளிகளாக இருந்தனர்.

  • அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய்,மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான். அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். லூக்கா 5:2-4,8-10

  • வேதத்தில்சொல்லப்பட்டுள்ள முதல் சீஷர் இவர் தான்.

  • அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான். மத்தேயு 10:2

  • பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.  மாற்கு 3:13-16

  • கடைசி இராப்போஜனத்தில், பேதுரு தம்மை மூன்று முறை மறுதலிப்பார் என்று இயேசு கணித்தார்.

  • அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள். மத்தேயு 26:31-35

  • சேவல் கூவுவதற்கு முன்பு, பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்த போது,  இயேசுவின் வார்த்தை உண்மையாகியது. இயேசு கைது செய்யப்பட்டு விசாரணை மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இது நடந்தது. பேதுரு வேலைக்காரப் பெண்களிடம் 3 முறை மறுத்தார். 3 முறை இயேசுவை மறுதலித்த பாவத்தின் வலையில், ஒரு சிறு பெண்ணிடம் (முதிர்ந்தவர் கூட இல்லை) அவர் விழுந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள். அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னான். அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள். அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான். மத்தேயு 26:69-75

  • இயேசு பரத்திற்கு ஏறினார். கிறிஸ்துவின் சீஷராக நியமிக்கப்பட்ட சீமோன் பேதுரு, இயேசுவை மறுதலித்தார். அவர் தனது கூட்டாளிகளான செபதேயுவின் குமாரருடன் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.

  • இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது: சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். மற்ற சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழ தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும்,அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். யோவான் 21:1-9,12-13

 

 

“இயேசுவுடனான காலை உணவு" மூலம் பேதுருவின் மாற்றம்

நம்மில் எவரேனும் இயேசுவின் இடத்தில் இருந்திருந்தால், நான் எச்சரித்தேன், ஆனாலும் நீ என்னைக்  காட்டிக்கொடுத்துவிட்டாய் என்று பேதுருவைத்  திட்டியிருப்போம். கோபத்துடன் பழிவாங்கும் எண்ணம் இருந்திருக்கும் அல்லது  அவரை அடிக்கிற அளவிற்குப் போயிருப்போம்.

 

துரோகத்திற்குப் பிறகு, இயேசு அவரைப் பார்த்து,  "நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?"  என்ற கேள்வியைக் கேட்டார். என்ன ஒரு மீட்பர் நம்  ஆண்டவர். நாம் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

  • அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். யோவான் 21 : 15-17

 

"நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" என்ற இயேசுவின் அன்பிலிருந்து இங்கே நிறைய கற்றுக்கொள்ளலாம்.

  • ஏன் என்னை மறுதலித்தாய்? என்று இயேசு பேதுருவைத் திட்டாமலும், துன்பப்படுத்தாமலும் அதற்கு பதிலாக,  "நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?"  என்று கேட்டார்.

  • இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 1 தீமோத்தேயு 1:15

  • இயேசு பேதுருவின் கடந்த காலத்தை கேள்விக்குட்படுத்தி வார்த்தைகளால் வலியை ஏற்படுத்தவில்லை, மாறாக அவருடைய கடந்த காலத்திலிருந்து மீட்டெடுக்க அவர் இருந்தார்.

  • இயேசுவைச் சந்தித்த போது பேதுருவுக்கு ஏற்பட்டிருக்கும் குற்ற உணர்வை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான். மத்தேயு 26:75

  • "நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?"  என்று ஒன்றல்ல மூன்று முறை கேட்டதன் மூலம் அவனிடமிருந்த கசப்பு வெளியேறியது.

  • 1 பேதுரு 1 இல் தனது சொந்த வாழ்க்கை சாட்சியை பேதுரு எழுதினார். அவருடைய வெற்றி இயேசுவின் மூலம் வந்துள்ளது.

    • நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 1 பேதுரு 1: 3, 6-7

  • ("நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” என்ற வார்த்தையைப் படியுங்கள் (பழைய vs புதிய)), மிகுந்த இரக்கத்தினால் இயேசு தந்தருளினார்என்று அவருடைய இரக்கத்தை விவரிக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 1 பேதுரு 1:3,4

  • அவர் ஒரு காலத்திற்கு துக்கத்தையும் சோதனைகளையும் கடந்து சென்றார்.  இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்;என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 1 பேதுரு 1:6

  • இயேசுவின் மீதான அவருடைய விசுவாசம் தங்கம் அல்லது விலையேறப்பெற்றதாக நாம் கருதுகிற எதையும் விட பெரியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.1 பேதுரு 1:7

 

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • எதிர்காலத்திற்காக அவர் திட்டமிட்டிருப்பதைச் செய்ய இயேசு நம் கடந்த காலத்தை பிடித்து வைத்துக் கொள்வதில்லை - இயேசு நம்மைக் குற்றப்படுத்துவதில்லை என்பது தான் பேதுருவின் மாற்றத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17 .  இயேசு இந்த வசனத்தை நிறைவேற்றினார்.

  • இயேசு நம்மை இரட்சிப்பதையேத் தேர்ந்தெடுத்தார். நம்முடைய பாவம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும்,  நம்மை நெருங்கி வரவும் இரட்சிப்பதையுமே அவர் தேர்ந்தெடுக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,  எபேசியர் 1:4

  • "நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?"  என்று கேட்க இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரால் நாம் காயப்படுத்தப்பட்டால், கோபமான,  அவமானப்படுத்துகிற வார்த்தைகளால் அவதூறு செய்வதையும் பழிவாங்குதலையும் தேர்ந்தெடுக்கிறோம். இதை மேற்கொள்ள அவரிடம் உதவி கேட்க வேண்டும்.

  • இயேசுவைக் காட்டிக் கொடுத்தாலும் பேதுருவின் விசுவாசம் இயேசுவின் மீது நிலைத்திருந்தது,  அதுவே இயேசு திரும்ப வருவதற்கு அடிப்படையாக இருந்தது. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு,  இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 1 பேதுரு 1:7 பேதுருவின் விசுவாச செயல் இந்த வசனத்தை நிறைவேற்றியது, அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18

  • இயேசு நம்முடைய பாவத்தை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. விசுவாசம் நம்மை இயேசுவிடம் திரும்ப வரச் செய்வதற்கான ஒரு கடையாணியாய் இருக்கிறது. பேதுருவைப் போல, திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கையை வைத்திருப்போம். அந்த பாவத்தினால் நாம் அழிந்துவிட்டோம் என்ற சாத்தானின் பொய்களுக்குள் விலைபோகாதீர்கள். நம்மிடம் எவ்வளவு மோசமான பாவம் இருந்தாலும், பாவத்தை மூடுகிற அன்பு நம்மிடம் உள்ளது (அதே பேதுரு தான் இதை எழுதியது). எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். 1 பேதுரு 4:8

 

 

பேதுரு ஒரு மீனவராக இருந்து மேய்ப்பராக மாறியவர்

அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். யோவான் 21:15-17

  • இயேசு முதல்தரம் “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக”  என்றும், இரண்டாந்தரம் “என் ஆடுகளை மேய்ப்பாயாக”  என்றும்,மூன்றாந்தரம் “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றும் கேட்கிறார்.

  • ஒரு மேய்ப்பராக பேதுருவின் சாட்சியம் 1 பேதுரு 5:1-4 இல் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும். சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது  மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். 1 பேதுரு 5:1-4

  • பேதுரு  தம்மை  எவ்வாறு மகிமைப்படுத்துவார் என்று இயேசு பேதுருவின் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கூறுகிறார் - நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். யோவான் 21:18-19

  • யூசிபியஸ் (முதல் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்) தனது திருச்சபை வரலாற்றில், பேதுரு நீரோ மன்னரால் ரோம் நகரத்தில் வைத்து சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் தான் தனது எஜமானரைப் போல இறக்கத் தகுதியற்றவர் என்று கூறி தன்னை  தலைகீழாக சிலுவையில் அறையும்படிக்  கேட்டுக் கொண்டதாகக் கூறுகிறார் (61 A.D).

  • "என்னைப் பின்பற்றி வா" என்று இயேசு சொன்ன போது, தமது கட்டளையை செய்வதற்கு பேதுருவை மீண்டும் அமர்த்தினார்.

  • ஆரம்பகால பெந்தேகோஸ்தே சபையை வடிவமைப்பதில் பேதுரு ஒரு முக்கிய கருவியாக இருந்தார். பேதுரு பிரசங்கித்தபோது, ​​மனந்திரும்பி இயேசுவிடம் வருவதற்கு ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டனர் என்று வாசிக்கிறோம். அவருடைய பிரசங்கங்கள் ஒவ்வொரு நாளும் 3000 ஜனங்களை இயேசுவிடம் கொண்டு வந்தது என்று வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 2 ஐ முழுமையாக வாசிக்கவும்).

  • அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். அப்போஸ்தலர்  2 : 14, 32-33, 36-37

  • அவருடைய வார்த்தையால் அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அப்போஸ்தலர் 2:38-41

 

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • பேதுருவைப் போல ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒருபோதும் அதீத நம்பிக்கையுடன் இருக்காதீர்கள் - இயேசுவை தான் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். தாழ்மையுடன்  இருங்கள். இந்த அதீத நம்பிக்கையினால் நாம் சாத்தானால் வீழ்த்தப்படலாம் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள். அதீத நம்பிக்கையானது ஆணவத்திற்கும் பெருமைக்கும் வழிவகுக்கிறது. பேதுரு முதல் சீஷர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாத்தானால் அவரை இழுத்துக் கொள்ள முடிந்தால், தேவனோடு நாம் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தாலும் நாமும் வீழ்த்தப்படலாம்.

  • மேய்ப்பராக இருக்க அழைப்பு இயேசுவிடமிருந்து வந்தது - மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதை வைத்து நீங்கள் செய்து கொண்டிருக்கும் எதையும் விட்டுவிடாதீர்கள். நீங்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ ஊழியம் செய்ய திட்டமிட்டால்,  இயேசு அழைக்காமல் அதை செய்யாதீர்கள். இயேசு பேதுருவிடம் மூன்று முறை கூறினார். அதே மாதிரி அவர் நம்மில் யாரையாவது ஊழியத்திற்கு அழைக்கத் திட்டமிட்டால், அவர் எந்த மத்தியஸ்தர்கள் மூலமாகவும் அல்லாமல் நம்மிடம் நேரடியாகப் பேசுவார். பேதுருவுக்கு செய்தது போலவே அவரது அழைப்பை நமக்கு மீண்டும் உறுதிப்படுத்துவார்.

  • இயேசு கூறும் வாக்குத்தத்தங்கள் உண்மையானவை - இயேசு,  “நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று சொன்ன போது, அப்படியே பேதுரு காட்டிக்கொடுத்தார். மகிமைப்படுத்துவாய் என்று சொன்னபோது அப்படியே நடந்தது ~ பேதுருவின் மரணமும் அவருடைய வாழ்க்கையும் இயேசுவை மகிமைப்படுத்தியது. அவருடைய வார்த்தையில் இரண்டு வழிகள் இல்லை.

  • "என்னைப் பின்பற்றி வா" என்று இயேசு கூறும்போது - நாம் அவரைப் பின்பற்ற வேண்டும், வேறு வழி இல்லை. பேதுருவை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் இருந்தார்.  இதன் மூலம், முதல் பெந்தேகோஸ்தே சபை உருவாகியது. ஆரம்பகால சபையில் ஏராளமான ஜனங்கள் இருந்தனர், ஏனென்றால் இயேசு அவர்களை வழிநடத்தினார். நான் முதல் சீஷன் அதனால் நான் வழிநடத்தட்டும் என்று பேதுரு சொல்லவில்லை. புத்தி, கவர்ச்சி அல்லது வேறு எந்த விஷயத்திலும் நாம் எவ்வளவு முதன்மையானவர்களாக இருந்தாலும் சரி, தேவன் நம்மை வழிநடத்தவில்லை என்றால் தேவனின் அழைப்பில் நாம் பரம ஏழையாகத் தான் இருப்போம்.

  • தனிப்பட்ட கீழ்ப்படிதல் முக்கியம் - பேதுரு இயேசுவை மகிமைப்படுத்தவே  அவரைப் பின்தொடர்ந்தார். அவர் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்தார்.

  • நமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இயேசுவுக்கு நமது கடந்த காலம் ஒரு பொருட்டல்ல - இயேசு பேதுருவைப் பெரியவராக்க அவரின் கடந்த காலத்தையோ, தவறுகளையோ பார்க்கவில்லை. ஆரம்பகால அப்போஸ்தல சபையை பேதுரு வழிநடத்தினார். மேலும், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலால் வேதத்தில் 2  புத்தகங்களை எழுதினார்.

  • பேதுருவை முதன்முறையாக சந்தித்த அதே இடத்தில் இயேசு அவரைத் தொடுகிறார் ~ வலைகளைக் கழுவிக் கொண்டிருந்த அதே கடற்கரை ("கலிலேயாக் கடல்").

  • இயேசு முதல் முறை சந்தித்தபோது,  பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே (அது கலிலேயாக் கடல்), நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். லூக்கா 5:1

  • இயேசு பேதுருவின் சீஷத்துவத்தை மீட்டெடுத்தபோது - இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார். யோவான் 21:1-9,12-13

bottom of page