top of page

ஆவிக்குரிய வளர்ச்சியில் முன்னேறுங்கள்

  • Kirupakaran
  • Sep 21
  • 7 min read
ree

தேவன் படைத்த அனைத்திலும் வளர்ச்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விதை மண்ணில் புதைந்தே கிடக்காது - அது உடைந்து, முளைத்து, பழம் தரும் மரமாக வளருகிறது. ஒரு குழந்தை என்றென்றும் குழந்தையாகவே இருக்காது - அது வளர்ந்து சிறுவனாகவும் பின்பு முழுமையான மனிதனாகவும் மாறுகிறது. இதே கொள்கை நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பொருந்துகிறது. ஆனாலும், பல நேரங்களில், விசுவாசத்தின் தொடக்க நிலையைத் தாண்டி செல்லாமல், குருட்டுத்தனத்திலும் ஏமாற்றத்திலும் சிக்கிக்கொண்டு ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறோம். ஆனால் தேவனுடைய நோக்கம் தெளிவாக உள்ளது: நாம் அவரோடு நெருக்கமாக நடந்துசெல்வதன்மூலம் தொடர்ந்து வளர வேண்டும் என்று அவர் அழைக்கிறார்.

 

ஆவிக்குரிய முதிர்ச்சியை எவ்வாறு அடைவது என்பது குறித்த வலிமையான வழிகாட்டுதலை எபிரெயர் புத்தகம் நமக்கு வழங்குகிறது.

 

ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. எபிரெயர் 6:1-2

 

வளர்ச்சிக்கான ஆசை

கிறிஸ்துவில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும் ஆவிக்குரிய முதிர்ச்சிக்காக ஏங்குகிறார்கள். ஆனால் வளர்ச்சியடைய, முதலில் அடிப்படை போதனைகளுக்கும் ஆழமான சத்தியங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் உணர வேண்டும். தற்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் முன்னேற முடியாது.

 

விசுவாசத்தின் அடித்தளம்

  • சுவிசேஷம் – இயேசு கிறிஸ்துவே ஆண்டவரும் இரட்சகருமாவார்.

  • கிறிஸ்துவில் விசுவாசம் – இது கிறிஸ்தவ வாழ்க்கையின் அடித்தளமாகும்.

  • பாவம் – பாவம் நம்மை தேவனிடமிருந்து எவ்வாறு பிரிக்கிறது என்பதையும்  மனந்திரும்புதல் மூலம் இயேசுவின் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதையும் புரிந்து கொள்வது.

  • இரட்சிப்பு – கல்வாரி சிலுவையின் மூலம் இயேசு நம் இரட்சிப்பை உறுதி செய்தார். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்தில் நிலைத்திருப்பதின் மூலம், நித்திய ஜீவனின் வாக்குத்தத்தத்தைப் பெறுகிறோம்.

  • ஞானஸ்நானம் – தண்ணீர் ஞானஸ்நானம் நம்மை கிறிஸ்துவில் புதிய சிருஷ்டியாக மாற்றுகிறது, அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் புதிய ஜீவனை நிரப்புகிறார்.

  • ஐக்கியம் – ஜெபம் மற்றும் தேவனுடைய வார்த்தையின் மூலம் கிறிஸ்துவில் வேரூன்றி நிலைத்திருத்தல்.

 

ஆவிக்குரிய வளர்ச்சி என்பதன் அர்த்தம் என்ன?  

  • தனிப்பட்ட வளர்ச்சி - குணத்திலும் விசுவாசத்திலும் முதிர்ச்சியடைதல்.

  • பூமியில் பரலோக வாழ்க்கை - நித்திய வாழ்வின் முன்னனுபவமாக  ஆவியினால் நடத்தப்படுவது. (ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:22-23).

  • ஆராதனையும் மகிமையும் - நாம் செய்யும் எல்லாவற்றிலும் தேவனை மகிமைப்படுத்துதல்.

  • அவரது இருதயத்தை அறிதல் - அவரைப் பிரியப்படுத்தும் வழிகளில் ஊழியம் செய்தல்.

  • ஆவிக்குரிய கனிகளைத் தருதல் - நம் வாழ்வில் கிறிஸ்துவைப் பிரதிபலித்தல்.

  • சத்தியத்தைப் பகுத்தறிதல் - சத்தியத்தையும் பொய்யையும் அடையாளம் காணும் ஆவிக்குரிய பகுத்தறிவில் வளர்தல், பொய்யான தீர்க்கதரிசிகளிடமிருந்து காத்துக் கொள்ளுதல்.

  • தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் பரிசுத்தம் - அவரது பரிசுத்தத்தைப் புரிந்துகொள்வது, பாவத்திலிருந்து தப்பி ஓடுவது மற்றும் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழுதல்.

  • தேவனுக்காக ஊழியம் செய்தல் - அவருக்கு ஊழியம் செய்ய நமது வரங்களைப் பயன்படுத்துதல், பிறருக்கு நன்மை பயக்கும் கனிகளைத் தருதல்.

  • ஆத்துமாக்களுக்கான பாரம் - தொலைந்து போன ஆத்துமாக்களுக்காக தேவனின் இருதயத்தை கொண்டிருத்தல்.

  • ஊழியத்துவம் - நமது சுய மகிமையைத் தேடாமல், தேவனின் ஊழியராக வாழ்வது.

 

எப்படி வளர்வது?

  • உங்கள் நிலையை மதிப்பீடு செய்யுங்கள் - நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நேர்மையாக ஆராயுங்கள்: தொடக்க நிலையிலா?, வளர்ந்துவரும் நிலையிலா? அல்லது முதிர்ந்த நிலையிலா? (ஆவிக்குரிய வளர்ச்சியில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்ற எனது வலைப்பதிவைப் படியுங்கள்).

  • வளர்வதற்குப் பாடுபடுங்கள் - தேவனுடனான உங்கள் நடையை ஆழப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுங்கள் – கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள். (கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7-8)

  • உணவின் சுவையை அனுபவிக்க உடலின் ஐந்து உணர்வுகளைப் பயன்படுத்துவது போல, தேவனுடனான நமது நடையில் நாம் உண்மையிலேயே வளர விரும்பினால் ஐந்து ஆவிக்குரிய உணர்வுகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த ஆவிக்குரிய உணர்வுகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

நம்மை இந்த உலகத்தை அனுபவிக்கவும் அறியவும் எப்படி தேவன் ஐந்து இயற்கை உணர்வுகளோடு படைத்தாரோ, அதைப் போலவே, அவருடைய பிரசன்னத்தை உணரவும், அவரில் வளர்ச்சியடையவும் ஐந்து ஆவிக்குரிய உணர்வுகளை நமக்குக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு உடல் உணர்விற்கும் ஒரு ஆவிக்குரிய இணைப்பு இருக்கிறது. நாம் விழித்தெழுந்து அவற்றைப் பயன்படுத்தாவிட்டால், நம்முடைய வளர்ச்சி குன்றியே இருக்கும். இந்த ஐந்து ஆவிக்குரிய புலன்களையும் ஆராய்ந்து பார்க்கலாம்.

 

1. ஆவிக்குரிய சுவை உணர்வு

  • தேவனுடைய நன்மையை ருசிக்க அழைக்கப்படுகிறோம் - அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ச்சியாயிருக்கவும், தேனை விட இனிமையான அவரது ஐக்கியத்தை அனுபவிப்பதற்கும் அழைக்கப்படுகிறோம்.

  • நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 1 பேதுரு 2:3

  • கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 34:8

2. ஆவிக்குரிய கேட்கும் உணர்வு

  • காது ஒலியைப் பெறுவது போல, நமது ஆவிக்குரிய காதுகள் தேவனின் சத்தத்தைக் கேட்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அவருடைய வார்த்தை மற்றும் ஆவியின் மூலம் அவர் நம் ஆத்துமாக்களுக்கு ஜீவனையும் பலத்தையும் அளிக்கிறார்.

  • உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். ஏசாயா 55:3

  • ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. வெளிப்படுத்தின விசேஷம் 2:7

3. ஆவிக்குரிய பார்வை உணர்வு

  • பாவம் நம்மை குருடாக்குகிறது, சாத்தான் நம்மை இருளில் வைத்திருக்க வேலை செய்கிறான். ஆனால் தேவன் நம் இருதயக் கண்களைத் திறக்கும்போது, ​​நாம் அவருடைய சத்தியத்தையும், அவருடைய திட்டங்களையும், அவருடைய மகிமையான சுதந்தரத்தையும் காணத் தொடங்குகிறோம்.

  • உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119:18

  • தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; எபேசியர் 1:18

4. ஆவிக்குரிய வாசனை உணர்வு

  • ஆராதனை தேவ பிரசன்னத்தின் நறுமணத்தை வெளிப்படுத்துகிறது. நல்ல உணவு அதன் மணத்தால் நம்மைக் கூடுதலாக மகிழ்விப்பது போல, ஆராதனை, துதி மற்றும் தியாகமாக கொடுப்பவை அவருக்கு முன்பாக ஒரு இனிமையான நறுமணமாக எழுகின்றன.

  • கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், ஏசாயா 11:3

  • எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். பிலிப்பியர் 4:18

5. ஆவிக்குரிய தொடு உணர்வு

  • நமது ஆவிக்குரிய உணர்திறன் பாவம், சத்தியம் மற்றும் தேவபிரசன்னத்தை பகுத்தறிய நமக்கு உதவுகிறது. மென்மையான மனம் அவருக்கு பதிலளிக்கும், ஆனால் கடினமான மனம் இருளின் பக்கம் விலகிச் செல்லும்.

  • நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். 2 இராஜாக்கள் 22:19

  • அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக்கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். எபேசியர் 4:18-19

 

 

ஆவிக்குரிய கட்டுகள்

ஆவிக்குரிய உணர்வுகள் நாம் முதிர்ச்சியில் வளர உதவுகின்றனவென்றால், அதே நேரத்தில் நம்மைக் கட்டிபோட்டு, வளர்ச்சியைத் தடுக்கும் சில "ஆவிக்குரிய கட்டுகளும்" உள்ளன. இவை வேதம் நமக்கு எச்சரிக்கும் ஆபத்துகள். கவனிக்காமல் விட்டுவிட்டால், அவை நம் கனிகளை அழித்து, நம் இருதயங்களைக் கடினப்படுத்தி, தேவனிடமிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

 

1. விலகிச் செல்வது

ஒரு காலத்தில் தேவனின் நன்மையை ருசித்து அனுபவித்தபின், பின்வாங்கியவர்களின் துயரத்தைப் பற்றி எபிரெயர் நமக்கு எச்சரிக்கிறது: ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எபிரெயர் 6:4-6

  • முதிர்ந்த விசுவாசிகள் கிறிஸ்துவை விட்டு விலகினால், ஒருகாலத்தில் அறிக்கை செய்தவரையே காட்டிக் கொடுத்த யூதாஸைப் போல மாறிவிடுவதற்கான ஆபத்தில் இருக்கிறார்கள்.

  • விலகிச் செல்வது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறது: முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. எபிரெயர் 6:8

  • இயேசு தெளிவாகக் கூறுகிறார் - கனி தராத கிளைகள் வெட்டப்படும். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5

 

கவனிக்க வேண்டியவை  

  • எந்த ஒரு தோட்டக்காரனும் கனி தராத செடிகளை நீண்ட நாட்கள் விட்டிருக்க மாட்டான். நமது பாவங்கள் அல்லது சுய விருப்பங்கள்தேவனுடைய பணிக்கு தடையாக இருக்கின்றனவோனால், அவை வெட்டப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

  • மழையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நிலம், கனியளிக்க மறுக்கின்றபோது, அதை எரிப்பதற்காக விவசாயியை யாரும் குறை கூறமாட்டார்கள். வளர்ச்சியும் கனி கொடுப்பதும் தேவனிடமிருந்து விலகாதிருக்க தேவையானவை என்பதை இந்தக் கருத்து காட்டுகிறது. நாம் உண்மையிலேயே கனி கொடுக்கும்போது, ​​நாம் இயேசுவில் நிலைத்திருக்கிறோம், விலகிப் போவதற்கான எந்த ஆபத்தும் இல்லை.

  • உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். கனி காணப்படாத இடத்தில், பாவத்தையும் சமரசமான வாழ்க்கையையும் வெட்டி அகற்ற வேண்டும் (மத்தேயு 5:29–30). தேவன் நாம் கனிகளைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவதால் அதை வெட்டி சுத்தம் செய்கிறார். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். எபிரெயர் 6:7

  • பல நேரங்களில், நாம் தேவனுடைய திட்டமிட்ட பாதையில் இருந்து விலகும்போது, நம்மைத் திருத்திக்கொண்டு, தேவனுக்குக் கீழ்ப்படியாவிட்டால் மீண்டும் அந்தப் பாதையில் செல்ல முடியாத நிலைக்குப் போய்விடும்.

 

2. சோம்பல்

"நீங்கள் அசதியாயிராமல்...”. எபிரெயர் 6:11(a)

  • சோம்பேறித்தனம் என்பது சாத்தான் நமக்குக் கொடுக்கிற அவனுடைய குணம். அவன் பூமியிலும் வானத்திலும் சுறுசுறுப்பாக சுற்றித் திரிகிறான், ஆனால் நாம் சோம்பேறிகளாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

  • “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; ...." (நீதிமொழிகள் 10:4) என்றும் "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று... " (2 தெசலோனிக்கேயர் 3:10) என்றும் வேதம் எச்சரிக்கிறது.

    • சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான். நீதிமொழிகள் 19:15

    • சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். நீதிமொழிகள் 10:4

    • ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. 2 தெசலோனிக்கேயர் 3:10

  • ஆவியில் சோம்பேறிகளாக இருப்பவர்கள் தணிந்து போனவர்களாகவும், ஜெபமற்றவர்களாகவும், பலவீனமாகவும் மாறுகிறார்கள்.

 

கவனிக்க வேண்டியவை  

சோம்பலை நிராகரிக்க வேண்டும். விடாமுயற்சி உடல் ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் வளர்ச்சியைத் தருகிறது. சோம்பல் என்பது பெரும்பாலும் ஆவிக்குரிய வளர்ச்சியில் கீழ்ப்படியாமையுடன் தொடர்புடையது. தேவன் நம்மை செய்யுமாறு கேட்டிருக்கிற காரியங்களை செய்யாமல் தாமதிக்கும்போது, சோம்பலுக்கு கதவைத் திறந்து, அதன்மூலம் சாத்தானுக்கு நம்முடைய உள்ளத்தில் காரணங்களை (மன்னிப்புகள்) விதைக்க இடமளிக்கிறோம். உதாரணமாக, நாம் தேவனுடைய வேதத்தைப் படித்து தியானிக்கத் தவறினால், அது ஒழுங்கற்ற பழக்கங்கள் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதித்ததால் தான்.

 

தொலைபேசிகளில் அதிக நேரம் விழித்திருப்பதால் அதிகாலையில் எழுந்து தேவனைத் தேடுவது கடினமாகிறது. காலை நேரம் கழிந்ததும் அன்றாட வேலைகளைக் காரணம் காட்டுகிறோம் - இப்படியே சோம்பலின் சுழற்சி தொடர்கிறது. மூலப் பிரச்சினை சோம்பேறித்தனம் மட்டுமல்ல. நம் நேரத்தை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதில் ஒரு ஒழுங்கு இல்லாதது அதிலும் குறிப்பாக மொபைல் பயன்பாடு போன்ற கவனச்சிதறல்களில் ஒழுங்கு இல்லாமை.

 

3. பொறுமையின்மை

நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, எபிரெயர் 6:11 (b)

  • ஒரு விவசாயி தனது பயிர்களுக்காகக் காத்திருப்பது போல, நாம் தேவனின் நேரத்திற்காகக் காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • பொறுமை ஆவியின் கனியாகும்.

  • பொறுமையின்மை என்பது சாத்தானின் ஒரு குணம், அவன் நம்முடைய உணர்வுகளைத் தூண்டி, பொறுமையிழந்து போகச் செய்கிறான், நாம் வாழும் இந்த உலகம் உடனடி பதில்களைத் தேடுகிறது. தேவனின் நேரமும் நமது நேரங்களும் பல சமயங்களில் ஒத்துப்போவதில்லை. இதுவும் ஒரு காரணத்திற்காகவே.

  • “…கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள்….” (யாக்கோபு 5:7) என்று யாக்கோபு அறிவுறுத்துகிறார்.

    • இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். யாக்கோபு 5:7

  • வசந்த காலங்கள் / வறண்ட காலங்கள் (இலையுதிர் காலம்) / மழை மற்றும் காற்று (போராட்டங்கள்) காலங்கள் வரும் - அவருக்காகக் காத்திருந்து அவரை நோக்கிப் பாருங்கள்.

 

கவனிக்க வேண்டியவை

  • வறண்ட காலங்கள், புயல்கள் மற்றும் காத்திருக்கும் நேரங்கள் பின்னடைவுகள் அல்ல - அவை தேவனின் வளர்ச்சி செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஆவியின் கனியாகிய பொறுமையை (கலாத்தியர் 5:22) கடைபிடிக்கவும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

  • பல நேரங்களில், நாம் அவரை நம்புகிறோமா அல்லது நம் சொந்த பலத்தில் முன்னேறுகிறோமா என்பதை சோதிக்க அவர் தாமதங்களை அனுமதிக்கிறார். அவருக்காகக் காத்திருக்கக் கற்றுக்கொள்வது ஆவிக்குரிய முதிர்ச்சிக்கான ஒரு முக்கியமான மனப்பாங்காகும்.

  • நாம் பொறுமையாக இருக்கும்போது, ​​அவரது திட்டங்களில் சிறந்ததை அவருடைய சரியான நேரத்தில் பெறுகிறோம். ஆனால் நாம் பொறுமையின்றி செயல்படும்போது, ​​"நான் உம்மை சார்ந்திருக்கவில்லை; என்னால் அதைக் கையாள முடியும்" என்று அவரிடம் சொல்கிறோம்.

 

4. பெருமை

  • ஆவிக்குரிய முதிர்ச்சியின் மிகப்பெரிய எதிரிகளில் ஒன்று பெருமை. அது, "நீங்கள் மற்றவர்களை விட சிறந்தவர், அதிக பரிசுத்தமானவர், ஆவிக்குரிய மனிதர்" என்று கிசுகிசுக்கிறது. சுயநீதி மனப்பான்மை நம்மை ஆவிக்குரிய பெருமைக்கு இட்டுச் செல்கிறது

  • "உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், ... தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்" என்று பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்: அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். ரோமர் 12:3

  • பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.1 பேதுரு 5:5-6

 

கவனிக்க வேண்டியவை

  • பெருமை குருடாக்குகிறது; தாழ்மை கிருபைக்கான வழியைத் திறக்கிறது. தெளிந்த மனம், தாழ்மையான ஆவி மற்றும் எல்லாவற்றையும் உங்கள் சாதனையாகப் பார்க்காமல், தேவனின் வரமாகப் பார்க்கும் திறனுக்காக ஜெபியுங்கள்.

  • தேவனிடம் உங்களைத் தாழ்த்துங்கள், அவரது பார்வையில் நீங்கள் ஒரு களிமண் என்பதை நினைவுகூருங்கள்.

  • பெருமை சாத்தான் வளர இடமளிக்கிறது. எனவே தாழ்மையுடன் தேவனைத் தேடி, அவருக்கு ஊழியம் செய்ய உங்களுக்கு ஒரு ஊழியனுடைய மனப்பான்மையைத் தருமாறு கேளுங்கள்.

 

5. அன்பின்மை

  • நமது மனித இயல்பு சுயநலத்தை நோக்கிச் செல்கிறது - நாம் முதலில் நம்மை நேசிக்கிறோம், அங்கீகாரத்திற்காக ஏங்குகிறோம், கவனத்தை நாடுகிறோம். ஆனால் தேவனின் அன்பு முற்றிலும் வேறுபட்டது: அது தன்னலமற்றது, தியாகம் நிறைந்தது, கொடுப்பது. சோகம் என்னவென்றால், வயதாகும்போது, ​​நமது அன்பு பெரும்பாலும் தணிந்து போகிறது. நாம் இந்த உலகத்தின் அன்பில்லாத தன்மையைப் பிரதிபலிக்கத் தொடங்குகிறோம் - ஆவிக்குரிய வரங்கள், அறிவு மற்றும் விசுவாசச் செயல்கள் ஆகியவற்றைத்  தாங்கிக்கொண்டு இருந்தாலும், அவற்றுக்கு அர்த்தத்தைத் தரும் ஒரே முக்கியமான விஷயத்தை அன்பை, நாம் இழக்கிறோம். அன்பு இல்லாமல், மற்ற அனைத்தும் வெறுமையானவை.

  • பவுல் இதை வலிமையாக வெளிப்படுத்துகிறார்.

    • அன்பு இல்லாமல் எல்லா ஆவிக்குரிய வரங்களும் வெறுமையாக இருக்கும் - நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 1 கொரிந்தியர் 13:1-3

    • அன்பே எல்லாவற்றிலும் மேலான ஆவிக்குரிய வரம் - இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் 13:13

 

கவனிக்க வேண்டியவை

  • தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி, உங்கள் இருதயத்தை ஆராய்ந்து  பார்க்க அவரை அழையுங்கள். அவர் உங்களை முதன்முதலில் இரட்சித்தபோது நீங்கள் அனுபவித்த அதே அன்பை உங்களுக்குள் மீண்டும் உயிர்ப்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

  • வெளிப்படுத்துதலில்,எபேசுவில் உள்ள சபைக்கு (7சபைகளில் முதல் சபை) தேவனின் செய்தி-"அன்பில்லாத சபை" - தெளிவாக இருந்தது: மனந்திரும்புங்கள்,ஆதியில் கொண்டிருந்த

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page