top of page
  • Kirupakaran

நீதிமான்களின் பாரம் : தானியேலின் வாழ்க்கையிலிருந்து ஒரு உள்ளார்ந்த பார்வை

வாழ்க்கையில், அறிமுகமில்லாத இடங்களிலிருந்து எதிர்பாராத எதிர்ப்புகளை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். இவை நம்மை குழப்பமடையச் செய்வதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதில் நாம் போராடுகிறோம். வேதத்தில் உள்ள தானியேலின் கதைக்கு நாம் திரும்பும்போது, ​நீதியான முறையில் வாழ்வதன் மீதில் வெளிச்சம் காண்பிக்கும் பல மதிப்பான காரியங்களைக் கண்டறிகிறோம். மேலும், நமது கேள்விகளுக்கு பதில்களையும் வழங்குகிறது.


தானியேலின் சிறுகதை வீடியோவைப் பார்க்க பரிந்துரைக்கிறேன், இதை விளக்க தானியேல் 6 ஆம் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறேன். தானியேலின் வாழ்க்கையிலிருந்து படிப்பினைகளைப் புரிந்துகொள்ள இது உதவும்.




தானியேலின் பின்னணி


பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாரால் எருசலேம் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இஸ்ரவேலின் ராஜ குலத்தார்களிலிருந்து இளம் மற்றும் திறமையான உன்னத ஆண்களை பாபிலோனிய பழக்கவழக்கங்களில் பயிற்சி பெறுவதற்குத் தேர்ந்தெடுத்தார். மூன்று வருடங்கள் தயாரானப் பிறகு, அவர்கள் ராஜாவுக்கு சேவை செய்ய வேண்டும்.


அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேலும் இன்னும் மூன்று பேரும் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. "தேவன் என் நியாயாதிபதி", என்ற அர்த்தம் கொண்ட தானியேலின் பெயரும் அவ்வாறு மாற்றப்பட்ட பெயர்களில் ஒன்று.


அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். தானியேல் 1:6-7


நேபுகாத்நேச்சாருக்குப் பிறகு, அவருடைய மகன் பெல்ஷாத்சார் பதவிக்கு வந்தார். பெல்ஷாத்சார் ஒரு ஆடம்பரமான விருந்தின் போது, எருசலேம் தேவாலயத்தில் இருந்து திருடிக் கொண்டுவரப்பட்ட புனித பாத்திரங்களை அவமரியாதையாக பயன்படுத்தினார். அதன் விளைவாக, மர்மமான முறையிலே ஒரு கை தோன்றி, சுவரிலே எழுதிற்று. அவருடைய ஜோசியர்கள் செய்தியை விளக்கத் தவறிய போது, தானியேல் உதவிக்காக அழைக்கப்பட்டார் (தானியேல் 5:13-16).


அந்த எழுத்தை வெற்றிகரமாக வெளிப்படுத்தியதற்காக, தானியேலுக்கு பாபிலோனிய ராஜ்யத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவி கொடுக்கப்பட்டது (வசனம் 29). தானியேல் தீர்க்கதரிசனம் கூறியது போல, அன்றிரவே பெல்ஷாத்சார் ராஜா கொல்லப்பட்டார். மேலும் பாரசீக ராஜா கோரேஸ் ராஜ்யத்தைக் கைப்பற்றினார், மேதியனாகிய தரியு ஆட்சியாளரானார். புதிய ஆட்சியின் கீழ், தானியேல் நிர்வாகிகளில் ஒருவராக தனது வேலைகளில் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினார். இது தரியு ராஜாவை அவரை முழு ராஜ்யத்தின் மீதும் இன்னும் அதிக அதிகாரம் கொண்ட பதவிக்கு உயர்த்துவதற்கு பரிசீலிக்கத் தூண்டியது (தானியேல் 6:1-3).


ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும், ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான். இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான். அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. தானியேல் 6:1-4


  • தரியு ராஜா 120 தேசாதிபதிகளை நியமித்திருந்தார் - "பண்டைய பாரசீக சாம்ராஜ்யத்தில் ஒரு மாகாண கவர்னர்", 120 தேசாதிபதிகளுக்கு மேலாக 3 பிரதானிகளையும் ஏற்படுத்தினார்.

  • எளிதாக சொல்வதென்றால், தரியு ராஜா காலத்தில், தானியேலை இன்றைய ஒரு ஐஏஎஸ் (IAS - இந்திய நிர்வாக சேவை) அதிகாரியாக நினைத்துக் கொள்ளுங்கள். அவர் அந்த 3 பிரதானிகளில் ஒருவர்.


தானியேலின் குணநலன்கள்


இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான். தானியேல் 6:3


  • அவர் அந்த 3 நிர்வாகிகளில் இருந்தும் தன்னை வேறுபடுத்திக் காட்டினார். மேலும், தனிச்சிறப்பு வாய்ந்தவராயிருந்தார்.


அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. தானியேல் 6:4


  • அங்கே பணிபுரிந்த அனைவரும் அவர் மீது பொறாமை கொண்டனர், அவர்கள் அவர் மீது குற்றம் கண்டுபிடிக்க முயன்றனர், “அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்;”.

    • அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை - ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது;

    • அவர் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக மிகவும் நீதியாக இருந்தார். அவரிடம், யாதொரு குற்றமும் காணப்படவில்லை - அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.

    • அவர் தனக்கு ஒதுக்கப்பட்டவற்றில் மிகவும் நேர்மையாகவும் உண்மையுள்ளவராகவும் இருந்தார். மேலும் அவரது ஞானம் தேவனிடம் இருந்து வந்ததால், பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய ஆழமான அறிவையும் அவர் கொண்டிருந்தார் - அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.

தானியேல் ஒரு நீதியுள்ள மனிதராக இருந்ததால், அவரை வீழ்த்துவதற்கு எல்லா தரப்பிலிருந்தும் பெரும் எதிர்ப்பு இருந்தது. தானியேலை தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கும்படிக்கு, அடுத்த 30 நாட்களுக்கு ராஜாவை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் சிங்கங்களின் கெபியிலே தள்ளப்படுவார்கள் என்றும் அரசாணை பிறப்பிக்கும்படி தரியு ராஜாவிடம் கேட்டுக் கொண்டார்கள்.


அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள். எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும் என்றார்கள். அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப்பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான். தானியேல் 6:5,7-9


நீதிமானாக இருப்பதன் விளைவுகளைப் பற்றிய 5 பாடங்கள்


நீதிமானாக இருப்பதன் விளைவுகளைப் பற்றி தானியேலில் இருந்து நாம் கற்றுக் கொள்ள 5 .பாடங்கள் உள்ளன.


பாடம் 1 - தேவன் தானியேலை இந்தக் குற்றமற்ற குணங்களோடு பாதுகாத்தார்.


தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். தானியேல் 6:10


  • தானியேல் தேவனை விசுவாசித்து அவருக்கு பயந்திருந்தார். மேலும், தேவனை அதிகமாக சார்ந்திருந்தார் - அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

  • தானியேல் தனது வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை, மாறாக அவர் எப்போதும் செய்வது போலவே தேவனை நம்பி சார்ந்திருந்தார் - தான் முன் செய்துவந்தபடியே.

  • தானியேல் எப்படி ஜெபித்தார்? - ஸ்தோத்திரம் செலுத்தினான்.

  • திறந்த ஜன்னல் வழியாக அவரைத் தாழ்த்தி தேவனிடம் ஜெபித்தார் (அவர் வெளியே சென்று ஜெபித்திருக்கலாம், ஆனால் மற்றவர்களைப் போல அப்படி ஜெபிக்க அவர் பாசாங்குக்காரராக இருக்கவில்லை) – “தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க,..”.

  • நம் தேவன் நீதியுள்ள தேவன், அவர் தம் பிள்ளைகளுக்கு நல்ல வரங்களைத் தருகிறார். தானியேல் விஷயத்தில், தேவன் மீதுள்ள விசுவாசம் மற்றும் அவர் ஒரு நாளில் மூன்று முறை முழங்காலில் ஜெபித்ததன் விளைவாக அவருக்கு நீதிமானின் குணங்கள் வந்தது என்று தானியேல் 6:4 இல் வாசிக்கிறோம்.


பாடம் 2 - தேவன் தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்போது, எதிரி அவர்களுக்கு விரோதமாக எழும்புவான்.


  • தேவனின் ஒளி அவர் மீது பிரகாசித்ததால், அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காணும்படி அவர் மற்றவர்களுக்கு மேற்பட்டவராயிருந்தார். இங்கே நாம் தானியேல் 6:3 இல், “இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்” என்று படிக்கிறோம். அவர் 3 நிர்வாகிகளை விடவும் தனித்துவம் பெற்றவராக இருந்து பிரிக்கப்பட்டார்.

  • இந்த வல்லமையின் ஆதாரம் என்னவென்று உலகம் புரிந்து கொள்ளாது (1 பேதுரு 2:9), நாம் பிரித்தெடுக்கப்பட்டு (முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்) அவருடைய ராஜ்யத்திற்கு வந்தோம். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9-10

  • எதிரி உங்களுக்கு விரோதமாக வரும்போது பயப்படாமல் இருங்கள் - "நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து". 1 பேதுரு 3:14

  • பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களிடமிருந்து கிறிஸ்துவுக்கே இதுபோன்ற போராட்டங்கள் இருந்திருக்கும் போது, நமக்கு எதிராக மக்கள் எழுப்பும் இந்த போராட்டத்தில் இருந்து நாம் ஏன் விடுவிக்கப்பட வேண்டும்? நாம் வெறும் மனிதர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 1 பேதுரு 3:18

  • இந்த வசனத்தை (1 பேதுரு 3:12) நிறைவேற்றும்படி தேவனுடைய கண்கள் தானியேலின் மேல் நோக்கமாயிருந்தது. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. 1 பேதுரு 3:12

  • நமக்குத் தெரிந்தவர்களிடமிருந்தோ அல்லது அறியப்படாத எதிரியிடமிருந்தோ நமக்குத் தொல்லைகள் ஏற்பட்டால், மனம் தளராமல் இருப்போம். ஏனெனில், அவர்கள் நம்மீது குற்றம் கண்டுபிடிக்க முற்படலாம்.


பாடம் 3 - எதிரி ஒரு கட்டளையை எழுதி வெற்றிபெற தேவன் ஏன் அனுமதித்தார்?


  • முந்தையதை வாசித்தால், அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. தானியேல் 6:4 - அவர்களால் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை ஏனெனில், தேவன் அவரை எதிரிகளிடமிருந்து பாதுகாத்தார்.

  • அடுத்த வசனம் - அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள். தானியேல் 6:5

  • இது, ஆணையை எழுத அனுமதித்ததன் மூலம் எதிரி வெற்றிபெற தேவன் ஏன் அனுமதித்தார்? என்ற கேள்வியை எழுப்புகிறது.

    • நம்முடைய பார்வையில், நாம் இதை ஒரு சிறிய தோல்வியாகக் காண்கிறோம், எதிரியைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் போது தேவன் பெரிய திட்டங்களைக் கொண்டிருக்கிறார். யோபின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம் ~ அவர் யோபின் விசுவாசத்தை மேலும் பலப்படுத்தி, அவரை அவரது முந்தைய வாழ்க்கையை விட நான்கு மடங்கு ஆசீர்வதித்தார்.

    • நம் தேவன் அனைத்தையும் அறிந்தவர், சாத்தானுடைய எந்த திட்டமும் அவருக்கு எதிராக வெற்றிபெற முடியாது. கொஞ்சக் காலத்திற்கு எதிரி வெற்றிகரமான திட்டங்களால் நம்மைத் தோற்கடித்துவிட்டதாகத் தோன்றினாலும், தேவனின் பெரிய நோக்கம், தமது சொந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக எதிரி வெற்றிபெற அனுமதிப்பதை உள்ளடக்கியிருக்கலாம்.

  • தேவனுடைய திட்டம் பெரியதாக இருந்தது.

    • தன்னைச் சுற்றி என்ன மாறினாலும் தானியேல் தேவனை எவ்வளவு விசுவாசிக்கிறார் என்பதைக் காட்ட அவர் தானியேலின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தினார்.

    • தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். தானியேல் 6:10

    • தேவனின் மகிமை / சக்தி மற்றும் வல்லமை ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் தானியேலின் செயல்கள் மூலமும் அவர் சிங்கத்தின் கெபியில் வாழ்ந்ததன் மூலமும் வெளிப்படுத்தப்பட்டது.

    • சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். தானியேல் 6:22

    • நீதிமானின் பாடுகள் 1 பேதுரு 3 ஆம் அதிகாரம் 9,14 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகள்படி நிறைவேறும். தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;". 1 பேதுரு 3:9,14

  • தானியேல் தன்மீது குற்றம் சாட்டுபவர்கள் மீது அவதூறுகளைக் குவிக்கவில்லை. அவர் துன்பத்தில் பொறுமையாக இருந்தார், அவர் சிங்கக்கெபிக்கு போகும்படி கேட்கப்பட்டபோது அதற்கு கீழ்ப்படிந்தார்.

  • அவர் தன் சுயபலத்தை நம்பாமல் தேவனை விசுவாசித்தார்.

  • அவர் தேவனின் பார்வையில் கறையற்றவராகவும் குற்றமற்றவராகவும் இருந்தார் - சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். தானியேல் 6:22

  • அவருடைய இருதயம் தேவனோடும் மனுஷரோடும் தூய்மையாக இருந்தது - “ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை”.

  • தானியேலைப் போல எல்லா ஜனங்களும் தொழுது கொள்ள வேண்டும் என்பதே தேவனின் திட்டம். தேவன் ஒரு தானியேலால் திருப்தி அடையவில்லை. தரியுவின் முழு ராஜ்யமும் தானியேலைப் போல இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், எனவே அவர் இதைச் செய்தார்.

  • என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும். தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான். தானியேல் 6:26-27


பாடம் 4 - பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே


  • தானியேலுக்கு துன்பம் நேர்ந்த போது, அது ஒரு இரவு மட்டுமே இருந்தது. தானியலுக்கு அது ஒரு இரவு, நாம் தேவனுடன் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது காலவரிசை மாறுபடலாம். அந்த சமயங்களைக் குறித்து கவலைப்படவேண்டாம்,ஏனெனில் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் போது அவர் உங்களை மீட்டெடுத்து, இந்தப் பாடுகளுக்குப் பிறகு இன்னும் பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்.

  • கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; 1 பேதுரு 5:10

  • தானியேல் தன் துன்பத்தில் தேவனைத் துதித்து ஸ்தோத்திரம் செலுத்தினார் - நாம் துதிக்கும் போது எதிரியின் திட்டங்கள் பலவீனமடைகின்றன.

  • தானியேலின் விஷயத்தில், அவர் இன்னும் அதிக வல்லமை பெற்றார் என்று வாசிக்கிறோம்- தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது. தானியேல் 6:28


பாடம் 5 - யுத்தம் தேவனுடையது / நாம் போராடுவதற்காக அல்ல


  • தானியேல் யுத்தம் செய்யவில்லை. அவர் ராஜாவுடனோ அல்லது அவரது சக நிர்வாகிகளுடனோ வாதிடவோ சண்டையிடவோ இல்லை. அவர் செய்ததெல்லாம், ஒரு நாளைக்கு 3 முறை தேவனிடம் ஜெபித்தது மட்டும் தான். யுத்தத்தை தேவனிடம் விட்டுவிட்டார். சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். தானியேல் 6:22

  • தேவன் யுத்தம் செய்யும் போது, ​​அவர் ஏதோ ஒரு வடிவத்தில் நமக்கு கிருபையைத் தருகிறார், இங்கே தானியேல் காயப்படாததால் ராஜா மிகவும் சந்தோஷப்பட்டார் - அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை. தானியேல் 6:23

  • நம் தேவன் நீதியுள்ள தேவன். அவர் நமக்காக யுத்தம் செய்வது மட்டும் இல்லாமல், எதிரி வேரிலிருந்து துண்டிக்கப்படும்படி உறுதிசெய்கிறார். தானியேலின் மேல் குற்றஞ்சாற்றின அனைத்து ஆண்களையும் அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் அதே சிங்கங்களின் கெபியில் வீசும்படி கட்டளையிட்டதைப் படிக்கிறோம்.

  • தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது. தானியேல் 6:24

  • தேவன் நமக்காகப் போரிடும்போது, எதிரியால் ஒரு சந்தர்ப்பத்தில் கூட நிற்க முடியாது.

    • தேசாதிபதிகள் மட்டும் சிங்கக் கெபிக்குள் செல்லவில்லை, அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் கூட சென்றனர் - எதிரி மீண்டும் வருவதற்கு அவனின் வேர்கள் எதுவும் இல்லாதபடிக்கு தேவன் உறுதியளிக்கிறார்.

    • மூடப்பட்டிருந்த அதே சிங்கங்களின் வாய் இப்போது திறக்கப்பட்டது - தேவன் கதவைத் திறக்கும்போது அதை யாராலும் மூட முடியாது, அவர் மூடுவதை யாராலும் திறக்க முடியாது. ஏனெனில், அவரே திறவுகோலை உடையவராயிருக்கிறார்.

    • பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; வெளிப்படுத்தின விசேஷம் 3:7.

    • தேவனின் கோபம் இங்கே காட்டப்படுகிறது. பெரும்பாலும் சிங்கங்கள் சதையை உண்பதைக் கண்டிருக்கிறோம், ஆனால் இங்கே எலும்புகள் கூட நசுக்கப்பட்டு உடைக்கப்பட்டன.

  • அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

  • பல சமயங்களில், எதிரி மேலான அதிகாரம் உள்ளவன் என்று நம்ப வைக்கப்படுகிறோம். தேவனின் மீது விசுவாசம் வையுங்கள். அவர் ஒருநாளும் நம்மை வெட்கப்படவிடமாட்டார்.

  • என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. சங்கீதம் 25:2-3


சுருக்கம்


நீங்கள் என்ன மாதிரியான போராட்டங்களை எதிர்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, தானியேல் 6 இல் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல ஆவிக்குரிய பாடங்கள் உள்ளன.


  • கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, தானியேலைப் போல தேவனைச் சார்ந்து வாழுங்கள். தினமும் 3 முறை ஜெபித்து, தேவனைத் துதித்து ஸ்தோத்தரித்தது தான் அவருடைய பலத்தின் ஆதாரம். தினமும் காலையிலும், இரவு அன்றைய தினத்தை முடிக்கும் முன்னரும் ஒரு நாளைக்கு 2 முறையாவது அதைச் செய்ய முயற்சிப்போம்.

  • நீதிக்குரிய பாடு - தேவன் இந்தப் பாடுகளை அனுமதித்தால் இது நாம் கருதுவதை விட பெரிய காரணத்திற்காக என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவனின் நீதியான பாடுகளுக்காக நாம் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

  • சில சமயங்களில், நம்முடைய பாடுகள் நீதியானது என்று நினைத்து, சாத்தானால் நாம் ஏமாற்றப்படலாம், உண்மையில், அது பாவத்திற்கு இட்டுச்செல்லும் சுய-நீதியான செயல்களின் விளைவாக இருக்கலாம். ஆகவே, தேவனுடைய பார்வையில் உண்மையிலேயே நீதியுள்ளவராக இருப்பதற்கும், பாவத்தின் விளைவுகளிலிருந்து வரும் பாடுகளை வேறுபடுத்திப் பார்ப்பதற்கும் அவருடைய வழிகாட்டுதலைத் தேடுவது மிகவும் முக்கியம். பகுத்தறிவுக்காக தேவனிடம் கேட்பதன் மூலம், நம்முடைய பாடுகள் அவருக்கான உண்மையான, நீதியான அனுபவமாக மாறும்.

  • தானியேலைப் போல பாடுகளுக்காக தேவனைத் துதித்து ஸ்தோத்தரியுங்கள். நீதியான காரணத்திற்காக நீங்கள் துன்பப்படுவதற்கு, எதிரி உங்களிடம் எதிர்ப்பைக் கொண்டுவந்த வாய்ப்பிற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். துன்பத்தின் மத்தியில் தேவனைத் துதித்து நன்றி சொல்லும்போது எதிரியின் சக்தி பலவீனமடைகிறது.

  • இந்தப் பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதை அறிந்து கொள்ளுங்கள் - தானியேலுக்கு அது ஒரே ஒரு இரவு மட்டுமே, தேவன் என்ன தீர்மானிக்கிறார் என்பதைப் பொறுத்து நம் ஒவ்வொருவருடைய துன்பமும் மாறுபடலாம். 1 பேதுரு 5:10 இல் பவுல் எழுதுவது போல் இந்த நிகழ்வுக்குப் பிறகு நீங்கள் வலுவாகவும் உறுதியாகவும் இருப்பீர்கள் என்பதில் நிச்சயமாய் இருங்கள்.

  • கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; 1 பேதுரு 5:10

  • நாம் தேவனை சார்ந்திருக்கும் போது, ​​யுத்தம் கர்த்தருடையது - நம்முடையது அல்ல - நாம் காத்திருந்து, நமக்காக யுத்தம் செய்ய தேவனை அனுமதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனின் திட்டத்தை சீர்குலைக்கும் எந்த செயலையும் உங்கள் பக்கத்திலிருந்து செய்யாதீர்கள்.


17 views0 comments
bottom of page