top of page

கள்ள போதனைகள்

  • Kirupakaran
  • Apr 17, 2021
  • 5 min read

ree

இந்த பதிவு, “கர்த்தருடைய நாள்” என்ற முந்தைய பதிவின் தொடர்ச்சி ஆகும். நாம் கடைசி நாட்களில் வாழ்கின்றோம் என்பதை நம்மைச் சுற்றியுள்ள பல விஷயங்கள் நமக்கு உணர்த்துகின்றன (கொரோனா தொற்று, பருவ நிலை மாற்றங்கள், நம்மைச் சுற்றி பெருகி கொண்டிருக்கின்ற பாவங்கள்). நியாயத்தீர்ப்பு நாள் வெகு சீக்கிரம் வரும் என்று இந்தக் காரியங்கள் /சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுகிறது.


கள்ள போதனைகள் குறித்து கடவுள் எனக்குக் கற்பித்ததை இந்த பதிவில் உங்களுக்குக் காட்டியுள்ளேன். நம்முடையரட்சகராகிய ஏசுகிறிஸ்து உலகில் இருந்தபோது கள்ள போதனை குறித்து நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


'அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள். ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ' மாற்கு 13:21-23


கள்ள போதனை குறித்து தேவன் நமக்கு விடும் எச்சரிக்கை “கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள். ஆகவே, கடவுளின் பிள்ளைகளாகிய நாம் , கள்ள போதனையைக் குறித்து கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகள் எவை?


கள்ள போதனையிலிருந்து நம்மைக் காக்கும் வழிகள்


1. போதனைகள் ஆண்டவரின் சுவிசேஷத்தில் இருந்து விலகி இருக்கும்


'ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், ' 1 தீமோத்தேயு 6:3


நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில், தேவ செய்திகளைக் கேட்பதற்கென்று, ஆசீர்வாதக் கூட்டங்கள்/ வீட்டு பிரார்த்தனைக் கூட்டங்கள் / டிவி பிரசங்கங்கள் / யூ டியூப் செய்திகள் / சமூக ஊடக செய்திகள் (பேஸ்புக் / வாட்ஸ் அப் மற்றும் பிற ஆதாரங்கள்) / இணைய செய்திகள், இது போன்று, நமக்கு பல வழிகள் உண்டு. ஆனால் நமக்குக் கொடுக்கப்படும் இந்த தேவ செய்திகள் எல்லாம் ஆண்டவரிடத்தில் இருந்து வருகிறதா அல்லது சாத்தான் நம்மை வஞ்சித்து கள்ள போதனைகளை நமக்குள் கொண்டு சேர்க்கின்றானா என்று பார்க்க வேண்டும்.


  • கிறிஸ்தவர்களாகிய நாம், பல ஆசீர்வாதக் கூட்டங்களில் கலந்துகொள்வதும், கடவுளின் வார்த்தையைப் புரிந்துகொண்டு அவருடன் நெருக்கமாக இருப்பதும் நமது ஆன்மீகப் பொறுப்பு என்று நினைக்கிறோம். எனவே இந்த ஆன்மீகப் பசிக்கு டிவி / யூடியூப் மற்றும் பல ஆதாரங்களுக்குத் திரும்புகிறோம். நாம் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது ஆவிக்குரிய வாழ்வில் ஆண்டவருடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று ஒரு நிறைவைப் பெறுகின்றோம்.

  • நாம் தேவனின் வார்த்தையைக் கவனித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், உண்மையான போதனையும், கள்ள போதனையும் ஒன்று போலத் தான் இருக்கும். தேவனின் ஆவி ஒன்றே நமக்கு இதைப் பிரித்துக் காட்டும் வல்லமை உள்ளது.

  • விசுவாசிகளாகிய நாம் , வார்த்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது, இது கடவுளிடமிருந்து வருகின்றதா அல்லது சாத்தானிடமிருந்து வருகின்றதா என்று ஆராய்ந்து மிகவும் கவனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் சாத்தான் தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மைக் குறிவைத்து ஏமாற்றி கடவுளின் நெருக்கத்திலிருந்து நம்மைத் தள்ளிவிடுகிறான். பல நேரம் நாம் கேட்கும் சத்தியம் தேவ சத்தியம், ஆனால் அது சாத்தானிடமிருந்து வருவதை நாம் உணராமல் இருப்போம்.

  • தேவனுடைய எல்லா போதனைகளும் இயேசுவை மையமாகக் கொண்டிருக்கும். இது ஒரு முக்கியமான எச்சரிக்கை.

  • நாம் கவனிக்க வேண்டிய, கள்ள போதனையின் அறிகுறிகள் / எச்சரிக்கை

    • இயேசுவின் வார்த்தையை மறுக்கும் விதமாக உள்ளதா ?

    • இயேசுவின் வார்த்தையை புறக்கணிக்கும் விதமாக உள்ளதா ?

    • உலக ஆசீர்வாதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஏசுவின் மகிமை மற்றும் உண்மையிலிருந்து விடுபட்டு இருக்கின்றதா?

    • இயேசுவின் வார்த்தைகள் திரித்துப் போதிக்கப்பட்டு இருக்கின்றதா?


2. தனிப்பட்ட போதனை மற்றும் பொது போதனை


தனிப்பட்ட போதனை மற்றும் பொது போதனையில் வேறுபாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.


'ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. ' 1 தீமோத்தேயு 6:3-5



  • நம்மில் பலர் போலி வாழ்க்கை வாழுகின்றனர். பலர் தனிப்பட்ட முறையில் ஒரு வழியிலும், பொதுவில் வேறுவிதமாகவும் நடந்துகொள்கிறார்கள். உங்களுக்கு போதிப்பவர் தனிப்பட்ட வாழ்வில் / பொது வாழ்வில் எவ்வாறு இருக்கிறார் என்று ஆராய்ந்த பாருங்கள், தேவ சிந்தை உள்ள ஒருவர் இருக்கிறாரா என்பது மிக முக்கியமான அடையாளம். தேவனின் ஆவி உங்களை வழிகாட்ட அவருடைய வார்த்தையைப் படித்து ஜெபியுங்கள்.

  • இதற்கு முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய எச்சரிக்கை. வேதம் கூறுவதாவது, “அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்”.

  • இந்த உலகில் பணத்தை மையமாகக் கொண்டுள்ள போதனைகளைக் கவனியுங்கள், “தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும்

  • பணம் / உலக ஆசீர்வாதங்கள் குறித்து மட்டும் பேசும் கள்ள போதனைகளில் கவனமாய் இருங்கள்.


3. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தை கைவிடுவதற்கான போதனைகள்


'ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடையமாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டுவிலகிப்போவார்கள். விவாகம்பண்ணாதிருக்கவும், ' 1 தீமோத்தேயு 4:1-2


  • இயேசுவின் மேல் உள்ள விசுவாசம் தான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் அச்சாணி. தேவன் நமக்காக சிலுவையில்மரித்து சாவை ஜெயம் கொண்ட தேவன். நாம் பாவிகள் என்று தெரிந்தும் நமக்கு அவருடைய கிருபையை அனுதினமும்தந்து வழிநடத்துகிறார். இது எல்லாம் நாம் இயேசுவின் மேல் வைத்துள்ள விசுவாசத்தின் நிமித்தமே நடக்கின்றது.

  • வேதத்தில் அப்போஸ்தலர் 6: 7 மற்றும் 14:22, கொலோசெயர் 1:23, 1 தீமோத்தேயு 1:19, யூதா 1: 3 ஆகியவற்றில் பலஇடங்களில் “விசுவாசத்தை” குறித்து படிக்கின்றோம் .

  • வஞ்சிக்கும் ஆவி நம்முடைய விசுவாசத்தைக் குலைக்கும் ஆவியாக இருக்கும் என்று வேதம் கூறுகிறது, “பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும்பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்

  • வஞ்சிக்கும் ஆவி சாத்தானிடத்தில் இருந்து வரும். அநேக நேரம் இந்த போதனைகள் பொய் கலந்து இருக்கும், ஆனால் உண்மை போன்று இருக்கும்.

  • வஞ்சிக்கும் ஆவி தேவ நெருக்கத்தில் இருந்து நம்மைப் பிரித்து பாவ வழிக்கு வழிநடத்தும். ஆதலால் நாம் கேட்கும்செய்திகள் மற்றும் நாம் நடக்கும் பாதை தேவ பாதையா என்று ஆராய்ந்து பாருங்கள்.

  • வஞ்சிக்கும் ஆவி குறித்த உதாரணம் ஆதியாகமம் 3 இல் கூறப்பட்டுள்ளது - சாத்தான் ஏவாளை ஏமாற்றினான், இதைமுதல் பேய் என்று படித்தோம். அங்கே சாத்தான், ஒரு பாம்பு மூலம் ஏவாளிடம்,“: நீங்கள் சாகவே சாவதில்லை; 'ஆதியாகமம் 3:4 என்று கற்பிக்கிறான்.

  • அவன் பொய் சொல்லி, ஏவாளின் மனதைக் குழப்பமடையச் செய்து, பின்னர் அவளை ஏமாற்றி, அவன் சொல்வதுசரியானது என்று அவளை நம்ப வைத்தான் “'அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்துதேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 'ஆதியாகமம் 3:4-5

  • கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றி உங்களுக்குள் வரும் சந்தேகத்தின் ஆவி தான் வஞ்சிக்கும் ஆவி.

கள்ள போதனைகள் - தவிர்க்க வேண்டிய காரியங்கள்


(1) தேவனின் வார்த்தையைப் பிரசங்கிக்கும் எந்த ஒரு நபரையும் நியாயந்தீர்க்க நமக்கு அதிகாரம் இல்லை. தேவ ஆவி உங்களைக் கள்ள போதகத்திலிருந்து காக்கும்படி தேவனிடத்தில் ஜெபியுங்கள். கிறிஸ்துவைப் பற்றி போதனை செய்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.


'ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், ' தீத்து 1:7-8


தேவனுடைய மனுஷன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால்,


  • மற்றவர்களைக் குறை சொல்லும் நபராக இருக்கக் கூடாது “குற்றஞ்சாட்டப்படாதவனும்”

  • தேவனை சார்ந்து இருக்கும் ஒருவராய், தன் சுய இச்சையின் படி எதையும் செய்யாதவருமாக இருக்க வேண்டும் “தன் இஷ்டப்படி செய்யாதவனும்

  • குடிப்பழக்கத்தில் இருந்து விலகி இருக்கும் ஒருவராக இருக்க வேண்டும் – “மதுபானப்பிரியமில்லாதவனும்

  • அடிதடி வம்புக்கு போகாதவராகவும் இருக்க வேண்டும் – “அடியாதவனும்

  • பணத்தின் மீது பேராசை கொள்ளாதவராக இருக்கவேண்டும் - “இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,

  • அன்புடன் சக மனிதர்களை வழிநடத்தும் ஒருவராக இருக்கவேண்டும் – “அந்நியரை உபசரிக்கிறவனும்

  • எப்போதும் நல்லதை செய்யும் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும் – “, நல்லோர்மேல் பிரியமுள்ளவனும்

  • எப்போதும் தெளிந்த தேவ புத்தி உள்ளவராக இருக்க வேண்டும் – “தெளிந்த புத்தியுள்ளவனும்

  • எப்போதும் தேவனின் பார்வையிலே கிருபை பெற்றவராக இருக்க வேண்டும் – “நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,


உங்கள் போதகருக்காக ஜெபியுங்கள். நீங்களும் கள்ள போதகர்களிடம் வழி நடத்தப்படமால் இருக்கும்படி ஜெபியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைக் காத்து ஆண்டவரின் உண்மையான ஊழியக்காரரிடம் உங்களை சேர்த்து வழிநடத்துவார்.


(2). அனுதினமும் தேவனுடைய வார்த்தையை தியானித்து, அவருடைய பிரசனத்திலே வழிநடத்தும்படி ஜெபியுங்கள். தேவனின் ஆவி தான் உண்மையான போதனைக்கும் / கள்ள போதனைக்கு இடையேயான வித்தியாசத்தை நமக்குக் காட்டமுடியும். நம்முடைய மூளைக்கு அதனைப் பகுத்து அறியும் தன்மை இல்லை. தேவ ஆவி இல்லாவிட்டால் நாம் கள்ள போதனையை கண்டுபிடிப்பது மிக கடினம்.


'கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம். ' கலாத்தியர் 5:24-25



(3). உங்களுடைய செயல்கள் தேவனின் சாயலை கொண்டதா அல்லது சாத்தானின் சாயலை கொண்டதா ? என்று உங்களை அடிக்கடி சுயமாய் ஆராய்ந்து பாருங்கள். இதற்கு நீங்கள் தேவனோடு அனுதினமும் நடக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் செய்யும் எந்தவொரு காரியமும் நம் பார்வைக்கு தவறு என்று தோணாது. மற்றவரை பார்க்கும்போது நாம் நல்லவர்களாகத் தோன்றுவோம். ஆனால் தேவ பார்வைக்கு நாம் பாவிகளாய் தோன்றுவோம். உங்கள் எண்ணங்கள் / செயல்களை ஆராய்ந்து பாருங்கள். இது ஏதேனும் ஒரு கள்ள போதனை மூலம் வந்ததா என்று எண்ணிப் பாருங்கள் .


'ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். ' கலாத்தியர் 6:3-4


'பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. ' 1 யோவான் 4:1-2


தேவனுடைய வார்த்தை கூறுகிறது "உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்".


அநேக நேரம் அவருடைய ஆவியை சோதிக்கின்றோம் என்று சொல்லி நாம் போதகர்களை நியாயம் தீர்க்கிறோம். இது மிகப் பெரிய பாவமாகும். யாரையும் நியாயம் தீர்க்க நமக்கு தகுதி இல்லை. யாராவது கள்ள போதகர்களைப் பார்த்தால் அவர்களுக்காக தேவனிடத்தில் ஜெபியுங்கள், தேவன் அவர்களை நியாயம் தீர்க்க வல்லவர் .


வேதம் கூறுகிறது, 'பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். ' ரோமர் 12:19


தேவனின் பிள்ளைகளாகிய நாம் தவறான போதனைகளைக் கண்டறிந்து, அந்த போதனையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அனுதினமும் ஜெபித்தால் மட்டுமே தேவ ஆவி நம்மைக் கள்ள போதனையில் இருந்து காக்கும்.




ree

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page