top of page
  • Kirupakaran

தேவன் உங்களைக் குறித்து எப்படி சாட்சி கூறுவார்?



நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரும்போது தேவனைக் குறித்து சாட்சியமளிக்கும்படி நாம் அனைவரும் கேட்கப்பட்டிருக்கிறோம். தேவன் நம்மைப் பற்றி எப்படி சாட்சியமளிக்க முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் யோபைக் குறித்துப் படிக்கும்போது, தேவன் யோபைப் பற்றி சாத்தானுக்குச் சாட்சி கொடுத்தார் என்பதை அறிந்து கொள்கிறோம். இது உன்னதமான செயல் ஆகும்.


' கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். 'யோபு 1:8

யோபின் தேவனுடனான தொடர்பு மற்ற எல்லா பழைய ஏற்பாட்டு பாத்திரத்திலிருந்தும் சுயாதீனமாக இருப்பதாகத் தெரிகிறது. அவர் மோசே மற்றும் இஸ்ரவேல் மக்களின் காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர். ஆபிரகாமுக்கு முன்பே அவர் இருந்திருக்கலாம் என்றும் பல வேதாகம ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


யோபுவின் வழிகளை தேவன் கவனிக்கும் விதமாக பல விசேஷித்த காரியங்கள் உண்டு. யோபு பற்றி தேவன் ஏன் இவ்வாறு சாத்தானுக்கு சாட்சி கொடுத்தார்? இதற்கு பதிலளிக்க, யோபுவிடம் தேவன் விரும்பிய பல குணங்கள் இருந்தன. இதனை நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்பற்றலாம்.


உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாக இருந்தார்.


வேதத்தில் யோபைப் பற்றிய அறிமுகம் “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய இருந்தார்” என்று இருக்கிறது. உண்மையில், அவர் குற்றமற்றவர் மற்றும் நேர்மையானவர் என்று பைபிளில் 3 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.


  1. 'ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்துபொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 'யோபு 1:1

  2. ' கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். 'யோபு 1:8

  3. 'அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப்பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனைநிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார். ' யோபு 2:3

  • உத்தமனும் , சன்மார்க்கனும் - "உத்தமனும் சன்மார்க்கனும் " என்றால் யோபு பாவமற்றவர் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் குற்றமற்றவர். பாவம் செங்குத்தானது, குற்றமற்றது கிடைமட்டமானது.. யோபு தனது சக மனிதர்களின் கண்காணிப்பு கண்களுக்கு முன்பாக வாழ்ந்ததால், யாராலும் யோபு மீது தார்மீக தோல்விக்கு நியாயமாக குற்றம் சாட்ட முடியவில்லை. அவரது புகழ் குறைபாடற்றதாக இருந்தது. அவருடைய தேவபக்தியும், செல்வமும், அந்தஸ்தும் இந்த மனிதர் கிழக்கின் அனைத்து மக்களிலும் பெரியவர் என்பதை உண்மையாக்கியது.

  • தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகி இருந்தார் – அவர் உலகப்பிரகாரமான காரியங்கள் அனைத்திலும் நேர்மையாக இருந்தார். தேவனுக்குப் பிடிக்காத எதையும் அவர் செய்யவில்லை. அவருடைய ஆசீர்வாதங்கள் யாவும் அவருடைய நேர்மையின் விளைவினால் உண்டானது. தேவனிடம் மனந்திரும்பும்படி ஏதேனும் பாவம் செய்திருக்கிறார்களா என்று அவர் தன் பிள்ளைகளையும்,தன்னையும், எல்லா வேலைகளையும், தொடர்ந்து பார்த்துக் கொள்வதில் கவனமாய் இருந்தார். அனுதினமும் தேவனிடம் முறையிட்டு, பாவமன்னிப்பு பெற்றார். நாம் வேதத்தில் "இது யோபின் வழக்கமான வழக்கம்" என்று வாசிக்கிறோம்.

'அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடேபோஜனம்பண்ணும்படி அழைப்பார்கள். விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர்பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாகயோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான். ' யோபு 1:4-5


அவர் நல்ல நேரத்திலும் / துன்ப நேரத்திலும் தேவனை வணங்கினார்


  • அவர் தேவனை வணங்கியதை “அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச்செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.” என்று படிக்கிறோம்.

  • தினமும் காலையில் தேவனுடன் தனது நாளை தொடங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் தேவனை மிக அதிகமாக சார்ந்து இருந்தார். அவர் எல்லாவற்றையும் தேவனிடம் ஆலோசித்தே செய்தார்.

  • அவருக்கு எதிராக வந்த பிரச்சனைகளில் அவர் தேவனை சபிக்கவில்லை, அதற்கு பதிலாக அவர் முகங்குப்புற பூமியில் விழுந்து ஆண்டவரைத் தொழுது, அவருடைய கஷ்டங்களுக்காக தேவனைப் புகழ்ந்தார். 'அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக்கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய்அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.' யோபு 1:20-22

  • நம் வாழ்வில் வரும் எந்த பிரச்சனைகளுக்காகவும் நாம் யாரும் தேவனை துதிக்க மாட்டோம். இதை நாம் யோபிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.


தேவனுடைய பாதுகாப்பு வேலி அவர் மேல் இருந்தது


'அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும்அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்துதேசத்தில் பெருகிற்று. 'யோபு 1:9-10


  • தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல் உள்ளது, முந்தைய வசனத்தை படித்தீர்கள் என்றால் சாத்தானிடம் யோபு பற்றி தேவன் சாட்சியம் அளிப்பதைக் காணலாம்.

  • ஆனால் சாத்தான் அதை நிராகரிக்கிறான் “யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?”

  • இந்த ஆசீர்வாதங்கள் மற்றும் தேவ பயம் எல்லாவற்றிற்கும் தேவன் அவனையும்,அவனுடைய வீட்டையும் சுற்றி வேலியடைத்ததே காரணம் என்று சாத்தான் சாட்சியம் கொடுக்கிறான். “நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றிவேலியடைக்கவில்லையோ?”

  • தேவன் அவனைச் சுற்றியுள்ள வேலியை அகற்ற அனுமதித்தார். பின்னர் யோபுவை பேரழிவு தாக்கியது.' கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதேஎன்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான். 'யோபு 1:12

  • தேவனின் வேலி அவருடைய பிள்ளைகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்கள் தொடும் அனைத்து பொருட்களையும் சுற்றி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். சாத்தானுக்கு அதன் மீது எந்த அதிகாரமும் இல்லை. ரோமர் 8:31ல் பவுல் சொல்வது போல் தேவனைச் சார்ந்து இருக்கவும், சாத்தானிடம் சொல்லவும் கற்றுக்கொள்வது நமக்கு ஒரு சிறந்த பாடம்.'இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ' ரோமர் 8:31


யோபு ஒருபோதும் தேவனுக்கு எதிராகக் கடிந்து கொள்ளவில்லை / பாவம் செய்யவில்லை


யோபு எவ்வளவு செல்வச் செழிப்பாக இருந்தார் என்பதற்கான விரைவான பார்வையை யோபுவின் அறிமுகத்தில் படிக்கலாம்.


'அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறுஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்தமனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். 'யோபு 1:2-3


இதை சற்று நினைத்துப் பாருங்கள், சில மணி நேரத்தில் செல்வம் அனைத்தும் பறிக்கப்பட்டது. யோபுவை சோதிப்பதற்கு சாத்தானுக்கு தேவன் அனுமதியளித்த பிறகு, யோபுவிற்கு எப்படி பேரழிவு ஏற்பட்டது என்பதைப் படிக்கிறோம்.


'பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது, ஒரு ஆள்அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில், சபேயர் அவைகள்மேல்விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய்வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன்வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது, வனாந்தரவழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். ' யோபு 1:13-19


  • இந்தக் கடினமான காலங்களிலும் அவர் தேவனைக் கடிந்து கொள்ளவில்லை. அது மட்டும் அல்லாமல் தேவனுக்கு எதிராக எந்த பாவமும் செய்யவில்லை. உங்களுக்கு அல்லது எனக்கு இதே நிலை வந்திருந்தால், ஆண்டவரை ஏன் ஆண்டவரே என்று சபித்திருப்போம். நான் என்ன செய்தேன், எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடந்தது என்று பலவாறு நம் பரம தகப்பனிடம் பல கேள்விகளைக் கேட்டு இருப்போம்.

  • யோபு வித்தியாசமானவர், அவர் தேவனுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் என்று படிக்கிறோம் “'அப்பொழுது யோபுஎழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: ' யோபு 1:20

  • தேவனுடைய காரியங்களைக் குற்றம் சாட்டும் பாவத்தை அவர் செய்யவில்லை என்று வாசிக்கிறோம் “'இவையெல்லாவற்றிலும் யோபுபாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.' யோபு 1:22

  • பின்னர் அவரது மனைவி தேவனைக் கடிந்து கொள்ளும்படி கேட்கிறார். ஆனால் அதற்கு யோபு கொடுத்த பதிலைப் பாருங்கள், 'அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்துஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம்தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. 'யோபு 2:9-10

  • யோபுக்கு எலிபாஸ், பில்தாத் மற்றும் சோபார் ஆகிய மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் யோபின் பாவத்தைக் கண்டித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர், இதைப் பற்றி யோபு 4 முதல் 38 வரை படிக்கிறோம்.

  • தேவன் யோபுவைக் கைவிடவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர் தமது இருப்பு உணர்வை விலக்கினார். இதுவே யோபுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது, எல்லா நேரங்களிலும் தேவன் யோபோடு இருந்தார். கண்ணுக்குத் தெரியாத அவருடைய கரங்களால் அவரை பலப்படுத்தினார். தேவனின் கண்ணுக்குத் தெரியாத, உணராத கரம் அவருக்குத் துணைபுரியாமல் யோபு இந்தச் சோதனையிலிருந்து தப்பித்திருக்க முடியாது.


யோபு தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினார்


'அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.'யோபு 42:3,6


  • யோபு தனது நண்பர்களுடன் செய்த அனைத்து புலம்பல்களுக்காகவும் தேவனிடம் மன்னிப்பு கேட்கிறார்.

  • தன்னை மண்ணுக்கும் / சாம்பலுக்கும் தாழ்த்தி தேவனிடம் பேசுகிறார் “தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான் “.

  • "ஆகையால் நான் என்னை அருவருத்து" என்று தாழ்மையுடன், தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டார்.

யோபுவின் ஆசீர்வாதங்கள் நீதியின் விளைவாக இருந்தன

  • யோபுவின் ஆசீர்வாதம் அவர் செய்த வேலையின் நிமித்தமாக அல்லாமல் அவருடைய நீதியின் விளைவாக இருந்தது. எல்லா துன்பங்களிலும், எல்லாவற்றையும் இழந்த பின்னும் அவர் குற்றமற்றவராகவும் நேர்மையாகவும் இருந்ததினால் தேவன் அவரை ஆசீர்வதித்தார்.

  • ஆண்டவர் மீண்டும் யோபுவைச் சுற்றி வேலியடைத்தவுடன் , அவர் முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டார்.

' கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம்ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப்பிறந்தார்கள். இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன்பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். 'யோபு 42:12-13,16


  • இப்போது கர்த்தர் யோபின் கடைசி நாட்களை அவனது தொடக்கத்தை விட அதிகமாக ஆசீர்வதித்தார். யோபின் கதையின் தொடக்கத்தில் நாம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் தெய்வீகமான மனிதனைக் காண்கிறோம். யோபு புத்தகத்தின் முடிவில் நாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் தெய்வீகமான ஒரு மனிதனைக் காண்கிறோம். இறுதியில், சாத்தானின் அனைத்துத் தாக்குதலும் யோபுவை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அதிக தெய்வீக மனிதனாக மாற்ற உதவியது.

  • ஆவிக்குரிய ரீதியில் நமக்கு வரும் தேவனுடைய ஆசீர்வாதங்கள் அங்கேயே நின்றுவிடுவது அல்ல, நமக்குத் தேவையான பொருள் ஆசீர்வாதங்களை அவர் நமக்குத் தருகிறார், ஆனால் நாம் எவ்வளவு பெறுகிறோம், எதைப் பெறுகிறோம் என்பதை அவர் தீர்மானிக்கிறார், மாறாக அல்ல.

நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

  • நாம் தேவனுக்கு முன்பாக "குற்றமற்றவர்களாகவும் நேர்மையாகவும்" உள்ளோமா? யோபுக்கு எப்படிச் சாட்சி கொடுத்தாரோ, அதுபோல தேவன் நமக்குச் சாட்சி கொடுப்பாரா?

  • உங்களை மேலும் நேர்மையாகவும், குற்றமற்றவராகவும் மாற்ற ஆண்டவரிடம் கேளுங்கள். அவருடைய பார்வையில் சரியாக இல்லாத விஷயங்களைக் காட்டவும் மற்றும் அவருடைய வழிகளுக்கு சீரமைக்க நீங்கள் மாற்ற வேண்டிய பகுதிகளைக் காட்டவும் அவரிடம் கேளுங்கள்.

  • முதலாவது தேவனைப் பாருங்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவரை அணுகுங்கள். யோபுவைப் போலவே தேவன் உங்களையும் அவருடைய பொருள் ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிப்பார். 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ' மத்தேயு 6:33, என்று இயேசு சொன்னபடி யோபு உண்மையாக வாழ்ந்தார். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் முதலில் ஆண்டவரை அணுகி அந்த வகையான வாழ்க்கையை வாழ ஆசைப்படுவோம்.

  • நாம் நீதியுள்ளவர்களாக இருக்கும்போதும், தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும்போதும் நம் வாழ்வில் அவருடைய வேலி இருப்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவருடைய அனுமதியின்றி சாத்தான் நம்மைத் தொட முடியாது. நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீங்கள் அவரைச் சார்ந்திருக்காத தருணத்தில் இந்த வேலி போய்விடும். தேவன் நமக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலிகளைக் கொடுப்பதில்லை. அவரது வேலியைப் பெற நாம் 100% அவரை சார்ந்து இருக்க வேண்டும்.

  • வாழ்க்கையின் துன்பங்களின் போது தேவனை சபிப்பதும், கேள்வி கேட்பதுமான மனித குணங்களுக்கு முரணாக, யோபு துன்பங்களை சந்தித்த போது தேவனை துதித்துப் புகழ்ந்ததை நாமும் பின்பற்றுவோம்.

15 views0 comments

Recent Posts

See All
bottom of page