top of page

எலிவேட்டர் பிட்ச்

  • Kirupakaran
  • Feb 28, 2021
  • 4 min read

ree

வணிக உலகில் “எலிவேட்டர் பிட்ச்” என்ற சொல் உள்ளது. ஒரு நிறுவனத்தில் முதலீட்டாளர் அல்லது நிறுவனத்தின்நிர்வாகியை கன்வின்ஸ் பண்ண ஒரு எலிவேட்டர் பிட்ச் பயன்படுத்துவார்கள். ஒட்டுமொத்த கருத்தையோ அல்லதுதலைப்பையோ தெரிவிப்பதே இதன் இலக்கு. உதாரணத்திற்கு உங்கள் வணிக யோசனைக்கு பணம் கொடுக்கத் தயாராகஇருக்கும் ஒரு முதலீட்டாளர் உங்கள் முன்வருவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் , ஆனால் நீங்கள் வைத்துள்ளயோசனையை வைத்து அவரை 1 நிமிடத்திற்குள் கன்வின்ஸ் செய்யவேண்டும். அதை எப்படி செய்வீர்கள்?


1 கொரிந்தியர் 15: 9-11 வசனத்தை நான் தியானிக்கும் பொழுது "எலிவேட்டர் பிட்ச்" என்ற கருத்து என்னைத் தாக்கியது, வேதத்தில் பவுல் தனது சாட்சியைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கின்றார்.


'நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்றுபேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபைவிருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிறதேவகிருபையே அப்படிச் செய்தது. ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியேவிசுவாசித்திருக்கிறீர்கள். ' 1 கொரிந்தியர் 15:9-11


நாம் அனைவரும் ஒரு நாள் கடவுளுக்கு முன்பாக நியாயத் தீர்ப்பு வழங்க வேண்டும், நம்மை ஏன் சொர்க்கத்திற்கு அழைத்துச்சென்று நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஒரு “எலிவேட்டர் பிட்ச்” கொடுக்கும்படி நம்மைக் கேட்கப் போகிறார். நாம் பெறக்கூடிய நேரம் 1 நிமிடத்திற்கும் குறைவாகவே இருக்கும் (சிறு வினாடி யோசித்துப் பார்த்தால்கடவுள் முன் முழு உலக மக்கள்தொகையும் நிற்கும் பொழுது நமக்கு 1 நிமிடத்திற்கும் குறைவாகவே நேரம் கிடைக்கும்). அப்படி அவர் உங்களைக் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை நான் என்னை நானேகேட்டுக்கொண்டேன் . என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.


உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பவுலின் அனுபவத்திலிருந்து நாம்கற்றுக்கொள்ள வேண்டியது அநேகம் உள்ளது, இது நியாத்தீர்ப்பின் நாளுக்கு நம்மைத் தயார்ப்படுத்தும்.


1 கொரிந்தியர் 15: 9-11-ல் பவுலின் சாட்சியத்தை நீங்கள் படித்தால், அதில் நான்கு விஷயங்களை அறியலாம். அதன் மூலம்நாம் கற்றுக் கொண்டு நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம்.


  1. பணிவு

  2. உள் மாற்றங்கள்

  3. கடினமாக உழைக்கக் கற்றுக்கொள்வது

  4. கடவுளைச் சார்ந்திருத்தல்


பணிவு


'நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்றுபேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ' 1 கொரிந்தியர் 15:9


பவுல் கூறுகிறார் ‘நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்’ …”நான் அப்போஸ்தலனென்றுபேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல”, பவுலின் வாழ்க்கையைப் பார்த்தால், புதிய ஏற்பாட்டில் இருபத்தேழு புத்தகங்களில்பதினான்கு புத்தகங்களை அவரே எழுதினார், ஆனால் அவர் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்கு கூட தகுதியற்றவர்என்று கூறுகிறார். அவருடைய ஊழியத்தின் மூலம் பலரை விசுவாசத்திற்குள் கொண்டு வந்துள்ளார், ஆனாலும் அவர் ஒருஅப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்கு கூடத் தான் தகுதியற்றவர் என்று கூறுகிறார். என்ன ஒரு தாழ்மையானஅணுகுமுறை !!


நாம் அனைவரும் கிறிஸ்துவுக்கு முன்னால் இந்த தாழ்மையான மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த உலகில்நாம் எவ்வளவுதான் கடவுளுக்காக சாதித்திருந்தாலும், தாழ்மையுடன் இருக்க வேண்டும். அந்த சிந்தை கடவுளிடம் ஜெபம்செய்யும்போது மட்டும் அல்ல, எல்லா நேரமும் இருக்கவேண்டும்



உள் மாற்றங்கள்


'ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது. ' 1 கொரிந்தியர் 15:10


பவுல் தனது பழைய வாழ்க்கையைப் பற்றி அப்போஸ்தலர் 9-ல் விரிவாக விவரிக்கிறார். அதன் சுருக்கமான பதிப்பை கலாத்தியர்1-ல் எழுதியுள்ளார்


'நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும்துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன். அப்படியிருந்தும், நான் என் தாயின்வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான்புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான்மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; ' கலாத்தியர் 1:13-16



ஆகவே இந்த இரு இடங்களிலும் (1 கொரிந்தியர் 15:10 மற்றும் கலாத்தியர் 1:14-15 ) பவுல், கடவுளின் கிருபை தம்மைத்தொட்டதாலேயே பழைய வழிகளில் இருந்து தாம் மாறினார் என்றும் , இதன் மூலம் தான் கடவுளின் அப்போஸ்தலர் ஆனார் என்றும் கூறுகிறார்.


உள்ளே மாற்றங்கள் - பழைய வாழ்க்கையில் பவுல் கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்புறுத்திக் கொண்டிருந்தார், ஆண்டவர்அவரைத் தொட்டபிறகு அவருடைய முழு அன்பினால் மாற்றப்பட்டார், பழைய சுபாவங்கள் அவரை விட்டு நீங்கியது . பவுலைப்போலவே நமக்கும் அந்த கிருபை உள்ளது. நாம் அதை பெற்றுக்கொள்ள ஆண்டவரிடத்தில் சரண் அடைய வேண்டும். அப்போது கடவுள் நம்மைப் படிப்படியாக மாற்றுவார்.


பிறகு நம் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்று கடவுளிடத்தில் ஒப்படைத்தால் , கடவுளின் கிருபை நம்மை ஆண்டவர்தீர்மானித்த வாழ்க்கைக்கு நேராக மாற்றும்.


கடினமாக உழைக்கக் கற்றுக்கொள்வது


1 கொரிந்தியர் 15:10 இல் அவர் கூறுகிறார், “அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்;


'ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது. '


இயேசு தேர்ந்தெடுத்த 12 சீடர்களில் ஒருவராக தான் இல்லாவிட்டாலும், கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. என்று பவுல்கூறுகிறார் “அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்” என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்வோம்..


  • பவுல் தனது அன்றாட வாழ்க்கையை வாழ மற்றவர்களை நம்பவில்லை, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகும் கூட, தனதுசொந்த தொழில் ஆன கூடாரம் செய்பவராக இருந்து அதன் மூலம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார் . அவர் பிரசங்கிக்க பல இடங்களுக்குச் சென்றாலும் தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் வாழ்க்கைத் தேவைகளைப்பார்த்துக் கொண்டார், இதைப் பற்றி அப்போஸ்தலர் 18: 1-3, அப்போஸ்தலர் 20: 33-35 ஆகிய வசனங்களில் படிக்கின்றோம் .

  • பவுல் தனது ஊழியத்திற்காக பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி பல இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அந்தநாட்களில் நம்மைப் போல பஸ்சில் செல்லவில்லை, பெரும்பாலும் நிறைய நடக்க வேண்டியிருந்தது, பிறகு கப்பலில்பயணம் செய்ய வேண்டியிருந்து, பல நாட்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தார் , உணவு இல்லாமல் பட்டினியாகஇருந்தார், அவருடைய பாடுகள் எண்ணில் அடங்காதவை.

  • துன்புறுத்தல் காலங்களில் பவுல் கடினமாக உழைத்தார் - அவர் சங்கிலிகளால் தாக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்என்பதை நாம் அறிந்திருக்கின்றோம், அந்தக் கடினமான காலங்களில் பல கஷ்டங்களை சகித்துக்கொண்டு அவர்கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. கடவுளுக்குரிய வைராக்கியம் அதிகமாக இருந்தது, எந்த கஷ்டங்கள்வந்தாலும் அவர் ஒருபோதும் நற்செய்தியை பிரசங்கிப்பதை நிறுத்தவில்லை.

நாம் அவருடைய கிருபையைப் பெற்றுச் செயலற்றவர்களாக, உட்கார்ந்து சும்மா இருக்க வேண்டும் என்று கடவுள்விரும்பவில்லை. என்னுடைய கடின உழைப்பினால் அல்ல, அவருடைய கிருபை நிமித்தம் தான் இதைப் பெற்றுக் கொண்டேன் என்கின்றார்.


நீங்கள் கடினமாக உழைக்கும்போது உங்கள் பலத்தை நம்பாதீர்கள், அவரை நம்புங்கள், அவருடைய கிருபை உங்களுடையஉழைப்பை அங்கீகரித்து உங்களை வெற்றி பெறச் செய்யும்.


ஆகவே, கடவுள் நம்மைச் செய்ய அழைத்ததைச் செய்ய உலகில் கடுமையாக உழைப்போம். கடவுளின் கிருபையைஉங்களுக்கு வழங்கும்படி கேளுங்கள், இதனால் நீங்கள் செய்யும் வேலை ஆசீர்வதிக்கப்பட்டு, கடவுளின் பணி என்ன என்பதைஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்தட்டும்.



கடவுளைச் சார்ந்திருத்தல்


'ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள். '1 கொரிந்தியர் 15:11


இங்கே பவுல் கூறுகிறார் , “நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நான் (பவுல்) அல்லது (இயேசுவின் 12 சீடர்கள்) என்று அவர் குறிப்பிடுகிறார், பவுலோ அல்லது மற்ற அப்போஸ்தலரோ யார் பிரசங்கித்தாலும் முடிவு ஒன்றுதான்.


அவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பிரசங்கித்தனர், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலைநம்பினர். எல்லாவற்றிற்கும் அவர்கள் கடவுளை நம்பியிருந்தார்கள், அதனால்தான் பிரசங்கிக்கப்பட்ட செய்தி பலரைசென்றடைந்தது, அதன்முலம் மக்கள் கிறிஸ்துவை நம்பினார்கள். அவர் தன்னுடைய பலத்தை சார்ந்து இருக்கவில்லை, ஆண்டவருடைய பலத்தை நம்பினார்.


நாம் பவுலைப் போன்ற ஒரு போதகராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் இன்னும் உலகில் பல காரியங்களைச்செய்கிறோம், நம்முடைய சொந்த பலத்தை நம்பி முயற்சிக்கிறோம். கடவுளிடம் தாழ்மையோடு அவருடைய சித்தத்திற்குசரணடையுங்கள், அவ்வாறு செய்தால் நாம் முழு விடுதலை அடைவோம்.



சுருக்கம்


நியாயத்தீர்ப்பு நாளில் நாம் அவருக்கு முன்பாக நிற்கும்போது, ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் முழு வாழ்க்கையையும்நாம் என்ன செய்தோம் என்பதை கடவுளிடம் சொல்ல உங்களைத் தயார்ப்படுத்த பவுலின் வாழ்க்கையிலிருந்துகற்றுக்கொள்ளுங்கள்.


இப்போது கூட இதை தொடங்க தாமதமாகவில்லை. கடவுளிடம் சரணடைந்து, அவருடைய மகிமைக்காக அவர் உங்களைஎவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார் என்று அவரிடம் கேளுங்கள்.


நீங்கள் கடவுளிடம் சரணடைய பயப்பட வேண்டாம், உடனடியாக உங்கள் வேலையை விட்டுவிட்டு ஒரு முழுநேர ஊழியம்செய்யும்படி அவர் கேட்பார் என்று எண்ணாதீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தை கடவுள் அறிவார், உங்கள் தேவைகள் என்ன,உங்கள் பலங்கள்/ பலவீனங்கள் யாவையும் அவர் அறிவார் . நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் கடவுள் அறிவார், அவர்உங்களை முழுநேரமும் தனது ஊழியத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார் என்று நினைத்தால், அவர் உங்களைகண்டிப்பாகப் பெறுவார் - நீங்கள் அதில் இருந்து தப்ப முடியாது. நீங்கள் செய்யும் வேலைக்கு மேலதிகமாக அவருக்காக சிலபகுதிநேர வேலைகளையும் செய்ய முடியும் என்று அவர் நினைத்தால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத வழிகளில் அவர்உங்களைப் பயன்படுத்தலாம். கடவுளிடம் சரணடையுங்கள், மீதியை அவர் கவனித்துக்கொள்வார் .



சரணடைவது முதல் படி, மற்றவைகளை அவர் கவனித்துக்கொள்வார். கடவுளுக்கு முன்பாக நம்முடைய சாட்சியத்திற்கு நம்மைதயார்ப்படுத்துவதற்கான சரியான படியாக இது இருக்கும்.


“எலிவேட்டர் பிட்ச்” செய்யும்படி கேட்கும்போது நமக்கு நல்ல பதிலை ஆண்டவர் ஆயத்தப்படுத்துவார்.




ree

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page