வழிபாடு
- Kirupakaran
- Feb 7, 2021
- 3 min read

வழிபாடு என்றால் என்ன? இந்த கேள்வியை நீங்கள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரிடம் கேட்டால், அதன் பதில் ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் கலந்துகொள்வது, நற்கருணை பெறுவது, புனித நீரில் ஆசீர்வதிக்கபடுவது என்று சொல்வர். ஒரு பாப்டிஸ்ட், மெதடிஸ்ட், எபிஸ்கோபல் சபையாரிடம் நீங்கள் கேள்வியைக் கேட்டால், அதன் பதில் பாடல்கள், சங்கீதங்கள், பைபிளைப் படித்தல், அதைத் தொடர்ந்து ஒரு பிரசங்கம் மற்றும் திருவிருந்து, சபை உறுப்பினர்களுடன் ஐக்கியம் கொள்வது போன்றவை சொல்வர். அதே கேள்வியை நீங்கள் பெந்தேகோஸ்தே சபை உறுப்பினர்களிடம் கேட்டால், அவர்கள் நல்ல உரத்த பாடல்களுடன் (கைதட்டல், நல்ல இசைக் குழுக்கள் (டிரம்ஸ் / கீபோர்டு / கிட்டார்) மூலம் செய்யும் இறை புகழ் வழிபாட்டை கூறுவார்கள், அதைத் தொடர்ந்து ஆவியில் நிறைந்த ஜெபம் மற்றும் நல்ல பிரசங்கத்தைக் கேட்பது என்று சொல்வர்.
கிறிஸ்தவர்களாகிய நாம் (எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி) இந்த நடைமுறையை நாம் "வழிபாடு" என்றுஅழைக்கிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வகையான வழிபாட்டைச் செய்யும்போது எப்போதும் ஒரு மனநிறைவு இருக்கும். இதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் இங்கே ஒரு குறிப்பு என்னவெனில், நாம் வழிபாட்டின் "வெவ்வேறுவடிவங்களை" செய்கிறோம்.
பைபிளின் அடிப்படையில் வழிபாடு என்ன என்பதை சமீபத்தில் அறிந்து கொண்டேன். அதை சார்ந்து இந்த பகுதியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய வழிபாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பவுல் வரையறுக்கிறார்
'அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களைவேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. ' ரோமர் 12:1
இதை உடைத்து, இன்னும் கொஞ்சம் விரிவாக புரிந்துகொள்வோம், ஏனெனில் பவுல் இதை ரோமில் இருந்து தம்மைப்பின்பற்றுபவர்களுக்கு எழுதுகிறார், 'அப்படியிருக்க, சகோதரரே,’
ரோமர் 12:1 உண்மையான வழிபாட்டை மூன்று பகுதிகளாக வரையறுக்கிறது
கடவுளின் இரக்கங்கள்
ஜீவபலியாக வாழ்வது
பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான வழிபாடு
கடவுளின் இரக்கங்கள்
வழிபாட்டின் முதல் பகுதி கடவுளின் இரக்கம் , இந்த வசனம் “தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு” என்று தொடங்குகிறது, இவை பின்வரும் பொருளில் அடங்கும்.
1. கடவுள் நம்மை பிள்ளைகள்ஆக தேர்ந்து எடுத்தார், நாம் கடவுளைத் தேர்ந்து எடுக்கவில்லை, நம்முடைய பாவ இயல்புஇருந்தபோதிலும் அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தார்
2. அவர் நம்மைக் காப்பாற்றியது நாம் செய்த நீதியுள்ள காரியங்களால் அல்ல, மாறாக அவருடைய வார்த்தை கூறுகிறது
'நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். ' தீத்து 3:5
3. நமது பாவங்களுக்கு உரிய தண்டனையை நாம் பெறவேண்டி இருப்பினும், அதை அவரே சிலுவையை சுமந்து நிறைவு செய்தார்
4. நாம் கடவுளை நேரடியாக அணுக , ஆவியானவரை நமக்கு கிருபையாய் கொடுத்தார்.
5. அவர் நமக்கு கொடுத்த மகிமையின் வாழ்வில் இருந்து விலகினாலும், அவர் தொடர்ந்து நம்மை நேசிக்கிறார், நம்மிடம் பொறுமையாக இருக்கிறார்.
6. நாம் வந்து நம்முடைய பாவங்களை இருதயத்திலிருந்து ஒப்புக்கொண்டால், அவர் மன்னித்து, அவர் நமக்காகத்திட்டமிட்டுள்ள நீதியைப் தருவார்.
ஜீவபலியாக வாழ்வது
வழிபாட்டின் இரண்டாம் பகுதி ஜீவபலியாக வாழ்வது ரோமர் 12:1
பலியை பற்றி பழைய ஏற்பாட்டில் சொல்வது ஆவது, கறைபடாத மிருகத்தை (எந்தவொரு குறைபாடுகள் இன்றி, ஆரோக்கியமான) காணிக்கையை கடவுளுக்கு வழங்குவதாகும்.
ஆனால் ஒரு கிறிஸ்தவருக்கு , ஜீவபலியாக வாழ்வது என்பது, நமது சுயத்தை பலியாக அர்பணிப்பது. இதன் பொருள் நம் உடலையும் ஆன்மாவையும் ஆவியையும் இயேசுவுக்கு அர்ப்பணம் செய்வது. நாம் கிறிஸ்துவோடு பலியாகும் வாழ்க்கை வாழ வேண்டும்.
அப்படி என்றால் நாம் உலகத்தின் சுகங்களில் இருந்து விடுபட்டு , நம்மையே தனிமை படுத்தி , உலகத்திற்கும் நமக்கும் ஒரு தொடர்பு ஏறி வாழவேண்டுமா? அப்படி இல்லை, அப்போ ஏன் கடவுள் உலகை படைத்தார்? நாம் வாழவும், இந்த உலகின் படைப்பின் வழியாக இன்பமாக இருக்கவும் கடவுள் உலகை படைத்தார். ஆனால் இதில் நமது பார்வை உலகின் மேல் இல்லாமல், இயேசுவின் மேல் இருக்க வேண்டும். இதன்முலம் நமது இதயத்தின் விருப்பத்தை செய்வார். அதன் மூலம் நாம் இந்த உலகில் தேவைப்படும் விதத்தில் பயன் படுத்துவோம். அந்த விருப்பம் தூய்மையானதும் அவர் பார்வையில் ஏற்றதும் ஆகும். இது தான் கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வோருக்கும், பிறருக்கும் உள்ள வேற்றுமை.
"நீதியின் பால் அடிமை" என்ற மனப்பான்மையுடன் ஒரு வாழ்க்கையை வாழுங்கள், அடிமையின் குணங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் - கிறிஸ்துவிடம் சரணடையும் அணுகுமுறை, உங்களை தாழ்மையுள்ளவர்களாக , பணியாளராக கருதுங்கள், கிறிஸ்து என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதைத்தான் பவுல் எழுதுகிறார்.
'பாவத்தினின்று நீங்கள்விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.' ரோமர் 6:18
மனிதர்களாகியநாம்திறமைகளால்நிறைந்திருக்கிறோம், அதைஅவருடையமகிமைக்காகப்பயன்படுத்தும்படிகடவுள்கேட்கிறார். நம்முடையதிறமைகளைநாம்எவ்வாறுபயன்படுத்தவேண்டும்என்றுபைபிள்சொல்கிறது
'நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில்தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன்வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன்போதிக்கிறதிலும், ' ரோமர் 12:6-8
பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான வழிபாடு
கடவுளின் வழிபாட்டின் மூன்றாம் பகுதி நாம் பரிசுத்தமாகவும் கடவுளுக்குப் பிரியமாகவும் இருப்பது ரோமர் 12:1, ‘பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான’
பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான வழிபாடு என்றால் என்ன?
நீங்கள் செய்யக்கூடிய எல்லா செயல் , இது கடவுளுக்குப் பிரியமானதா? இந்த உலகில் தூய வாழ்வு வாழ்வது என்பது மிகவும் கடினம் அல்லது சாத்தியமற்றது என்றுகூட சொல்லலாம். இதை எவ்வாறு சாத்தியமாக்குவது என்று பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார்“. “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம்புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”. நம் புதுப்பித்தல் நம் உள்ளத்தில் , சிந்தையில் இருந்து ஆரம்பம் ஆக வேண்டும். நம் சுயநலத்திலிருந்து கடவுளை மையமாகக் கொண்டு நம் இதயத்தை ஒவ்வொரு நாளும் கடவுளின் வார்த்தையைத் தேட வேண்டும், ஜெபிக்க வேண்டும், பின்னர் அவருடைய பரிசுத்த ஆவியானவர் நம் மனதையும் எண்ணங்களையும் புதுப்பிப்பார், அதன் மூலம் அமைதியையும் மகிழ்ச்சியையும் காணலாம்.
'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ' ரோமர்12:2
கடவுளின் விருப்பத்திற்கு சரணடையுங்கள் - கடவுள் உங்களுக்கு சரியான விருப்பத்தை தருவார், உலகின் விருப்பங்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பார். தேவனுடைய காரியங்களால் நம் மனதைப் புதுப்பித்தால் “கடவுளின் விருப்பம் என்ன என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்க முடியும்” என்று பவுல் கூறுகிறார். கடவுளின் விருப்பம் "நல்ல, மகிழ்ச்சியான மற்றும் பரிபூரண விருப்பமாக" இருக்கும். கடவுளின் விருப்பம் நிறைவானது , முழுமையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
கிறிஸ்துவோடு ஒத்திராத குணங்களை உங்களுக்குள் உள்நோக்கிப் பாருங்கள் . பவுல் இதை வேர்கள் (கிறிஸ்து) மற்றும் கிளைகளுடன் (மனிதர்களாக) உள்ள ஒப்புமையில் சொல்கிறார்.
'நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச்சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள். சுபாவக்கிளைகளை தேவன்தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. ஆகையால், தேவனுடையதயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும்காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால்நீயும் வெட்டுண்டுபோவாய். ' ரோமர் 11:18,21-22
'துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத்தரித்துக்கொள்ளுங்கள்.' ரோமர் 13:14
" உண்மையான மற்றும் சரியான வழிபாடு" என்பது கீழ்காணும் மூன்றை நாம் நினைவேற்றி செயல்படுத்தும் போதும் கிடைக்கும்.
கடவுளின் இரக்கத்தை ஏற்று கொள்ளுங்கள்
உயிருள்ள ஜீவபலியாக அர்ப்பணம் செய்யுங்கள்
"பரிசுத்தமாகவும் கடவுளுக்குப் பிரியமாகவும்" வாழுங்கள்
ஞாயிறு மட்டும் வழிபாடு ஆராதனை செய்வதை விட , இந்த வழிபாட்டை தினசரி 24X7 செய்ய உதவுமாறு ஆண்டவரிடம் கேளுங்கள்.
இந்த பகுதியை தமிழில் மொழிபெயர்த்த எனது சகோதரி திருமதி ரம்யா டொமினிக் மற்றும் எனது நண்பர் திருமதி பாரதி செல்வகுமார் ஆகியோருக்கு நன்றி
Comments