top of page
  • Kirupakaran

இடறி விழுவது



ஒரு குழந்தை நடக்க முயற்சிப்பதற்கு முன்பு முதல் படிகள் எடுத்து வைக்கும் போது அது தடுமாறும், அதன்பிறகு மீண்டும் மீண்டும் முயற்சித்து விரைவாக நடக்கக் கற்றுக்கொள்கிறது. ஆனால் வயதான பிறகு நம் கண்கள் மற்றும் கால்கள்பலவீனமடைகின்றன. சில சமயங்களில் நாம் நடக்கும் போது கீழே தடுமாறி விழுகின்றோம். கீழே விழுந்த பின் சற்று கூச்சமாக வெட்கப்படத்தக்க செயலாக உணர்கிறோம்.சில சமயங்களில் அடிபட்டு விடுவதுமுண்டு,


கிறிஸ்தவ வாழ்க்கையில் இடறி விழுவது என்றால் என்ன ? நாம் தேவபக்தியிலிருந்து விலகி பாவத்தின் வலையில் விழுந்துதெய்வபக்தி இல்லாத வாழ்க்கையை வாழ்வதாகும்.


நான் 1 கொரிந்தியர் 10 படித்து தியானித்த போது "இடறி விழுவது" / " தடுமாறுவது" குறித்து எனக்கு ஆண்டவர் கற்றுக் கொடுத்த வார்த்தைகளை இங்கு வரையறுத்து உள்ளேன்.


 

நாம் ஏன் தடுமாறுகிறோம்?


இரண்டு எஜமானர்களுக்கு சேவை


'நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடையபோஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. ' 1 கொரிந்தியர் 10:21


நம்மில் பலர் பழைய பாவ வாழ்க்கை மற்றும் புதிய ஆன்மீக வாழ்க்கை ஆகிய இரு வழிகளிலும் வாழ்வதைக் காண்கிறோம். இதை நம் சொந்த வசதிக்கு / சூழ்நிலைக்கு ஏற்ப தேர்வு செய்கிறோம். சாத்தான் இதைப் பயன்படுத்தி , நாம் உணராமலேயே மெதுவாக நம்மை நம் பழைய பாவ வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறான்.


நம் செயல்கள் மற்றவர்களை தடுமாறச் செய்கிறது


'நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள்இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.' 1 கொரிந்தியர் 10:32-33


கிறிஸ்தவர்களாகிய நம்முடைய பல செயல்கள் மற்ற நபர்களை (கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதவர்கள்) பாவத்தில்தடுமாற வழிவகுக்கும். மனிதர்களாகிய நாம் பிறரை எளிதில் பின்பற்ற ஆரம்பிக்கிறோம். பிறர் செய்யும் பாவ செயல்களைக் கற்றுக்கொள்கின்றோம். அதனால்தான் கடவுளின் விருப்பத்திற்கு எதிராக நாம் தடுமாறுகிறோம் என்பதை உணராமல் பாவவாழ்க்கைக்கு சென்றுவிடுகிறோம்.

ஆன்மீக உணர்வின்மை


மயக்க மருந்து கொடுக்கப்பட்ட அனுபவம் ஏதேனும் உங்களுக்கு உண்டா என்று எனக்குத் தெரியாது. பொதுவாக மயக்க மருந்து உடல் பகுதியை உணர்ச்சியற்றதாகவும், வலியை உணராமலும் இருக்கும்படி செய்கிறது. அப்பொழுது தான்மருத்துவரால் அறுவை சிகிச்சை செய்ய முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கடவ பல்லை வெளியே எடுத்தபோதுஎனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. மருத்துவர் வாயில் மயக்க மருந்தைக் கொடுத்தபோது, அவர் என் வாயில் என்னசெய்கிறார் என்பதை என்னால் அறிய முடிந்தது. நான் விழித்திருந்த போதும், எந்த வலியையும் உணரவில்லை. ஆனால் மயக்கமருந்து செயலிழந்தவுடன் எனக்கு கடுமையான வலி ஏற்பட்டது.


நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் இதுவே உண்மை. நாம் தடுமாறி பாவத்திற்குள் விழும்போது, நாம் சாத்தானால்ஆன்மீக ரீதியில் உணர்ச்சியற்றவர்களாக ஆக்கப்படுகிறோம். முதன்முறை பாவத்தில் விழும்போது நாம் சாத்தானுக்கு இடம்கொடுத்தால், நம்மில் இன்னும் பல பாவங்களுக்கு அது வழிவகுக்கிறது, மேலும் இந்த பாவங்கள் நாம் கடவுளிடம்நெருங்கி வருவதை மிகவும் கடினமாக்குகிறது.


நாம் தடுமாற இந்த ஆன்மீக உணர்வின்மை ஒரு காரணம் என்று பவுல் சொல்லுகின்றார் .


'ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள்வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள்இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்குஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். 'எபேசியர் 4:17-19



மூன்று விஷயங்களால் நாம் ஆன்மீக ரீதியில் உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறோம்


a. நாம் கடவுளுக்குள் இருக்கும்போது - மனம்  இதயம்  ஆத்மா ஆகிய மூன்றும் கடவுளுடன் இணைந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறோம்.


b. மனதை சிதைப்பது - நம்முடைய சிந்தனை பயனற்றது என்பதால், நாமும் கிறிஸ்துவை அறியாதவர்களைப் போலசிந்தித்து செயல்படுகிறோம். நமது சிந்தனை வீண் என்றால், அது நம் மனதை சிதைக்கும்.


c. இதயத்தை சிதைப்பது – “மனம் சிதைந்துள்ளது” என்ற சிந்தனையால் நம் இதயம் கடினப்படுகிறது, எனவே நாம் நம்இதயத்தில் இருளடைகிறோம், அங்கே கடவுளின் வெளிச்சத்திற்கு இடமில்லை. ஆதலால் தவறான விஷயங்களால்நாம் போஷிக்கப்படுகிறோம். சாத்தான் மேலும் நம்மை ஏமாற்றி இதயத்தை சிதைத்துக் கட்டியெழுப்புகிறான்,.


d. ஆத்மாவை சிதைப்பது - நாம் மனதை / இதயத்தை இழக்கும் போது ஆத்துமாவையும் இழக்கிறோம். பாவத்தை உணர்கிற திறனை இழந்து, மயக்க நிலையில் இருக்கிறோம். பாவச் செயல்களை செய்கின்றோம் என்று தெரிந்தும் நம் ஆத்துமா நம்மைக் கடிந்து கொள்ளாத நிலையில் இருக்கிறது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக கடவுளின் வழிகளில்இருந்து விலகி செல்கிறோம்.



 

கிறிஸ்தவ வாழ்க்கை


தடுமாற்றம் இல்லாத ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் வாழ்வது எப்படி? நாம் தடுமாறும் போது, அந்த தடுமாற்றத்தை உணர்ந்து நாம் பழைய - பாவமான வாழ்க்கைக்கு போகாமல் இருக்க பவுல் நமக்கு 6 காரியங்கள் கற்றுத்தருகிறார்.


கிறிஸ்துவுக்குள் உங்கள் மனதைப் புதுப்பிக்கவும்


'அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள்களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடையசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். 'எபேசியர் 4:22-24


வேதம் இவ்வாறு தொடங்குகிறது “'அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிறபழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு”, பாவ இச்சைகளுக்குத் திரும்பும் விஷயங்களை இந்த உலகம் எப்போதும் தொடர்ந்து வீசி நம்மைக் கவர்ந்து இழுக்கிறது . அதில் மாட்டிக்கொள்வது மிகவும் எளிதானது.


நமக்கு ஒரே வழி, கடவுளுடைய வார்த்தையைப் படித்து, அதை தினமும் தியானித்து, அவருக்காக நேரம் ஒதுக்கினால்கர்த்தருடைய வார்த்தை நம்மைக் காக்கும். நாம் எல்லோரும் பைபிள் வைத்திருக்கும் பாக்கியவான்கள். ஆரம்பகாலகிறிஸ்தவர்களுக்கு பைபிள் இல்லை, அவர்கள் வேதத்தைக் கேட்க ஒரு இடத்தில் கூடிவந்தார்கள். இன்று நாம் பலமொழிகளில் பைபிளைக் கொண்டிருக்கிறோம், பைபிளைப் படிக்க பல வழிகள் (அச்சிடப்பட்ட நகல் / செல்போன் / வலைத்தளங்கள் போன்றவை) உள்ளன. தயவுசெய்து தினமும் பைபிள் படிக்க நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் அதை எவ்வளவுஅதிகமாகப் படிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அதை விரும்புகிறீர்கள். அதைப் படித்து, மனப்பாடம் செய்துதியானியுங்கள். கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதை ஒரு சடங்காக மாற்ற வேண்டாம், நீங்கள் என்ன செய்ய வேண்டும்என்று உங்களுக்குக் கற்பிக்கும் விதத்தில் அதைப் படியுங்கள். இது உங்கள் வாழ்க்கைக்கான அறிவுறுத்தல் கையேடு.



பொய்யான வாழ்க்கையிலிருந்து விலகுங்கள்


'அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனேமெய்யைப் பேசக்கடவன். 'எபேசியர் 4:25


நம்மில் பலருக்கு வாழ்வில் பல பக்கங்கள் உண்டு. வீட்டில் தனிமையில் இருக்கும் போது ஒன்று, வெளியே பொதுவெளியில்செல்லும்போது ஒன்று, சுற்றி யாரும் நம்மைப் பார்க்காதபோது ஒன்று. உங்களுடைய எல்லாவிதமான அவதாரங்களையும்கடவுள் பார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் என்ன இருக்கிறது, எண்ணங்களில் என்னஇருக்கிறது, செயல்களில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிவார். கடவுளிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.


நம்மில் உள்ள வெவ்வேறு அவதாரங்கள் பொய்யான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். கடவுள் பொய்யான வாழ்க்கையைவெறுக்கிறார்.


எப்பொழுதும் கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் சூழ்நிலையின் அடிப்படையில் வெவ்வேறுஅவதாரங்களை வாழ வேண்டாம். உங்கள் செயல்கள் / எண்ணங்கள் கடவளுக்குப் பிரியமானதா இல்லையா என்று நீங்களேஉங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் மற்ற மனிதர்களை மகிழ்விக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிகவலைப்பட வேண்டாம். உங்கள் ஒரே நோக்கம் கடவுளைப் பிரியப்படுத்துவதாகும்.


உங்களிடம் காணப்படுகின்ற பொய்யான காரியங்கள் என்னவென்று வெளிப்படுத்தக் கோரி கடவுளிடத்தில் கேளுங்கள். நாம்அனைவரும் பரிசுத்தமுடனும் நீதியுடனும் இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். எனவே அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார்.


கோபத்தில் பாவம் செய்யாதீர்கள்


'நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல்தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். ' எபேசியர் 4:26-27


கோபம் ஒரு பாவம் என்று சாத்தான் நம்மை நம்பச் செய்து ஏமாற்றுகிறான். கோபம் ஒரு உணர்வு. உங்கள் கோபத்தில்இருந்து வரும் செயல்கள் பாவத்திற்கு காரணமாகின்றன. நீங்கள் கோபமாக இருக்கும் நேரத்தை நினைத்துப் பாருங்கள், அந்த உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்தினால், அந்த தருணத்திலிருந்தே நீங்கள் பாவத்திலிருந்து விலகிச் செல்லலாம். யாராவது உங்களை வார்த்தைகளால் கோபப்படுத்தும் போது, நீங்கள் எதிர்வினை எதுவும் செய்யாமல் அமைதியாக இருங்கள்.இது அடுத்தவரை அவருடைய கோபத்திலிருந்து விலகச் செய்து, நீங்கள் பாவம் செய்யாதபடி உங்களைக் காக்கும். வேதம்இவ்வாறு சொல்லுகிறது “பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” பாவ உணர்ச்சிகளுக்கு இடமளிப்பதன் மூலம் நாம் பிசாசுக்கு ஒரு காலடி கொடுக்க வேண்டாம்.


உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த கடவுளிடம் ஜெபியுங்கள். அவர் உங்களை மாற்றுவார். நீங்கள் அந்த சூழ்நிலையில்இருக்கும்போது இந்த உணர்ச்சியை அமைதிப்படுத்துவார். நீங்கள் கோபமாக இருக்கும்போது, அமைதியாக இருங்கள், சிறிது நேரம் தனித்து , அமைதியாக இருக்கும்போது கிறிஸ்துவைப் போலவே இருப்பீர்கள் என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்,. இயேசு தம்மைக் குற்றம் சாட்டியவர்களுக்கு முன்பாக அமைதியாக இருந்தார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். இது கடினமான செயல். மேலும் மேலும் பயிற்சி செய்தால், விரைவில் அதில் வெற்றி பெறலாம். சிறியதாகத்தொடங்குங்கள், நான் கொஞ்சம் முயற்சித்தேன், இப்போது கர்த்தர் என்னை இந்த மாற்றத்தின் பாதையில் நடத்திக்கொண்டு இருக்கிறார்.


பிறரிடம் திருட வேண்டாம்


'திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன்கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். ' எபேசியர் 4:28


என்ன இது, நான் ஒரு கிறிஸ்தவன், நான் “பிக் பாக்கெட்டுகள் அல்லது மொபைல் போன் திருடன்” அல்லவே , எனவே,எனக்கு இது பொருந்தாது என்று உங்களில் பலர் எண்ணலாம். நம்மில் அநேகர் அலுவலகம் அல்லது வணிகச் சூழலில்உள்ளவர்களுடன் வேலை செய்கிறோம். பல நேரங்களில் நாம் மற்றவர்களின் வேலையை நம்முடைய வேலை என்றுகூறிக்கொள்கிறோம். இந்த வகை செயல்களும் திருடுவதற்கான ஒரு வழியாகும். எனவே மற்றவர்களின் உழைப்பையும், புகழையும் நாம் எடுத்துக் கொள்வதும் ஒரு வகையான திருட்டு தான்.


உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். மற்றவர்களின் வேலையிலிருந்து நீங்கள் எந்தெந்த பகுதிகளில் அவ்வாறு பெற்றிருக்கிறீர்கள் என்று பாருங்கள். அந்த நடைமுறையிலிருந்து நீங்கள் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும் என்பதைகடவுளிடம் சரணடைந்து, கேளுங்கள்.


வீண் பேச்சை விட வேண்டும்


'கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால்அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். 'எபேசியர் 4:29


ஒரு சகோதரர் அல்லது சகோதரி இல்லாதபோது அவர்களைப் பற்றி புறம் பேசுவது பாவம். இத்தகைய பேச்சுக்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கையிலும் நிகழ்கின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் இத்தகைய பேச்சில்இருந்து விலகிச் செல்ல வேண்டும். நாம் பல சீரியல்கள் / திரைப்படங்கள் / யூடியூப் /வாட்ஸுப் வீடியோக்கள் மூலம் பலவாறுகவரப்படுகின்றோம். பலர் இதைப் பார்த்துவிட்டு தங்கள் வாழ்வில் அந்த சீரியல்கள் போல வாழ முயற்சிக்கிறார்கள்.

யாரேனும் ஒருவர் மற்றொருவர் (இல்லாத ஒருவரைப்) பற்றி பேச முயற்சிக்கும்போது, அத்தகைய பேச்சை துண்டித்துவிடுங்கள். அவ்வாறு செய்தால் கடவுள் உங்களுக்கு உதவுவார். நீங்கள் அதைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடன்அவ்வகையான பேச்சு உங்களை விட்டு விலகிவிடும் .


நீங்கள் ஒருவரைப் பற்றி புறம்பேசும் காரியங்களை உங்களுக்குக் காட்டவும் , அவற்றை உங்களிடம் இருந்து அகற்றும்படியும் கடவுளிடம் கேளுங்கள். புறம் பேசுவது ஒரு பாவம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


பரிசுத்த ஆவியானவரை துக்கப் படுத்த வேண்டாம்


'அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத்துக்கப்படுத்தாதிருங்கள். ' எபேசியர் 4:30


நான் முன்பே கூறியபடி நாம் நம்மை கிறிஸ்தவர்களாக அழைத்தால், நம்முடைய மனம் / இதயம் மற்றும் ஆத்மா கடவுளோடுஇணைந்திருக்கும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்து , நம்மை வழிநடத்தி, பாவத்திலிருந்து நம்மை விலகிச்செல்லவும் செய்வார் .

நாம் பாவம் செய்யும்போது அல்லது கடவுளுக்கு முன்பாக பரிசுத்தம் இல்லாமல் இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர்துக்கப்படுவார்.

கடவுளைத் துன்புறுத்தும் பாவமான வழிகளை நமக்கு கடவுள் வெளிப்படுத்தக்கூடிய ஒரே வழி ஜெபம். அவர் உங்களுக்குவிஷயங்களை வெளிப்படுத்துவார். நீங்கள் மனந்திரும்பும்படி செய்து, உங்களைக் கழுவி பரிசுத்தமாக்குவார். பரிசுத்தஆவியானவரை வருத்தப்படுத்தும் செயல்களை உங்களுக்குக் காட்ட கடவுளிடம் கேளுங்கள்.


சுருக்கம்


  • கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் ஏன் தடுமாறுகிறோம்?

    • நாம் இரண்டு எஜமானர்களுக்கு சேவை செய்வதால் தடுமாறுகிறோம்.

    • நம் செயல்கள் மற்றவர்களை தடுமாறச் செய்கிறது

    • நாம் ஆன்மீக உணர்ச்சியற்ற நிலையில் தடுமாறுகிறோம்

  • நாம் தடுமாறாமலும், மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லாமலும் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி?

    • கிறிஸ்துவுக்குள் உங்கள் மனதைப் புதுப்பிக்கவும்

    • பொய்யான வாழ்க்கையிலிருந்து விலகுங்கள்

    • கோபத்தில் பாவம் செய்யாதீர்கள்

    • பிறரிடம் திருட வேண்டாம்

    • வீண் பேச்சை விட வேண்டும்

    • பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்த வேண்டாம்


நாம் அனைவரும் பாவத்திலிருந்து விடுபடவில்லை. நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தடுமாறக்கூடும், ஆனால்பரிசுத்த ஆவியின் உதவியினாலும், மீண்டும் எழ வேண்டும் என்ற நிலையான விருப்பத்தினாலும், நாம் வெல்ல முடியும்.


`




Recent Posts

See All

Stumble

bottom of page