top of page
  • Kirupakaran

சுவிகார புத்திரர்


சுவிகார புத்திரன் என்பது ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு. நாம் இந்த உறவை அப்பா ~ மகன் என்றுகூறலாம், உலகில் பல விஷயங்களைப் பெறுவதற்கு இந்த உறவைப் பயன்படுத்துகிறோம், பள்ளி கல்வி முதல், அனைத்துசொத்துக்களையும் நம் தந்தையிடமிருந்து பெறுகிறோம். சிலர் தந்தையிடமிருந்து தங்களுடையக் குடும்ப வியாபாரத்தைஎடுத்துக்கொள்கிறார்கள், அதேபோல் அரசியல்வாதிகள் மகன்கள் அடுத்த தலைமுறை அரசியல்வாதியாக மாறுவதற்குஅவர்களின் தந்தையின் மரபுரிமையைப் பெறுகிறார்கள்.


கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளின் பிள்ளைகள் என்று பைபிளில் பலமுறை படித்து இருக்கிறோம். நாம் எப்படி கடவுளின்பிள்ளைகளாக இருக்க முடியும்? பவுல் எபேசியரில் "சுவிகார புத்திரர்" பற்றி எழுதுகிறார். இதில், நாம் எவ்வாறு கடவுளின் குழந்தைகளானோம் மற்றும் சுவிகார புத்திரர்களின் பண்புகளை எவ்வாறு பெற்றோம் என்பதைக் குறித்துக் கூறுகிறார்.


இந்த வரையறையில் சுவிகார புத்திரர் குறித்து இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்வோம்


  1. சுவிகார புத்திரர் - பூர்வீகம்

  2. சுவிகார புத்திரர் - நற்குணங்கள்


 

சுவிகார புத்திரர் - பூர்வீகம்


பவுல் எபேசியரில் இது குறித்து விளக்குகிறார்.


'தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படிமுன்குறித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர்உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத்தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, ' எபேசியர் 1:4-6


1. சுவிகார புத்திரர் என்ற உறவு உலகத்தை உருவாக்குவதற்கு முன் உண்டானது: வேதம் கூறுவதாவது “'தம்முடையதயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு”,உலகம்உருவாக்கப்படுவதற்கு முன்பே ஆண்டவர் நம்மைத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மைத் தேர்ந்தெடுத்ததற்கான நோக்கம்நாம் "பரிசுத்தமாக இருக்க வேண்டும்" மற்றும் "குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும்” என்பதே.


குற்றமற்றவர்: ஆதியாகமம் 1, 2 - ஆம் அதிகாரத்தை நீங்கள் படித்தால், கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கும்போது மனிதனை தமது சொந்த உருவத்தில் உருவாக்குவதை நாம் காண்கிறோம். அவர் சரியான மற்றும் குற்றமற்ற ஒன்றைஉருவாக்க விரும்பினார், அதனால்தான் தமது சொந்த உருவத்தில் உருவாக்க மனிதனை அவர் தேர்வு செய்தார்.


'தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாகஅவர்களைச் சிருஷ்டித்தார். ' ஆதியாகமம் 1:27



பரிசுத்தம்: கடவுள் படைத்த உலகம் பரிசுத்தமானது. அவர் ஏதேன் தோட்டத்தை உருவாக்கி, நன்மை தீமை அறியத்தக்கவிருட்சத்தின் கனியை மட்டும் தொடக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால் சாத்தான் ஆதாமை ஏமாற்றி பாவத்தில்விழவைத்தான். கடவுளுக்கு எதிராக செய்த பாவத்தின் காரணமாக மனிதன் தனது சொந்த ஆசைகளினால்பரிசுத்தமில்லாமல் போனான்.


2. இயேசுவின் மூலம் - சுவிகார புத்திரர்: நாம் பாவிகளாக இருந்தபோதிலும், மனிதகுலத்தின் மீதான கடவுளின் அன்பின்நிமித்தம் அவர் தனது ஒரே குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்காக இறக்கும்படி கொடுத்தார். அவர் இந்தஉலகத்தின் சவால்களை அறிந்துகொள்ள நம்மைப் போலவே வாழ்ந்து வளர்ந்தார் (லூக்கா 2:52) மேலும் அவர் கிறிஸ்துஏசுவின் இரத்தத்தின் மூலம் மரணத்தை வென்றார். “அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத்தெரிந்துகொண்டபடியே”. நாம் இயேசுவே கடவுள் என்று நம்பும் போது, அவர் மூலம் சுவிகார புத்திரர் என்ற உரிமையைப் பெற்றுக் கொண்டு, கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறோம்.


3. கடவுளின் புகழ்ச்சி மற்றும் விருப்பம்: வேதம் கூறுவதாவது “பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடையகிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக முதலில் இயேசுவை தம்முடைய குமாரனாக அனுப்ப கடவுள் தேர்வு செய்தார்.


கடவுளின் புகழ்ச்சி – பரிசுத்த ஆவி மூலமாக கடவுளின் புகழ்ச்சியை அவர் நமக்குத் தர விரும்புகிறார். கிறிஸ்துவின்இரத்தத்தினால் சீடர்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் இலவசமாகக் கொடுக்கப்பட்ட அதே பரிசுத்த ஆவி நமக்கும்கொடுக்கப்பட்டு இருக்கிறது - இந்த ஆவியால் என்ன செய்ய முடியும் என்பதையும் ஆவியின் பலன்களைப் பற்றியும்கலாத்தியர் 5:22 இல் வாசிக்கிறோம்.


'ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். ' கலாத்தியர் 5:22


அவர் நமக்காக அளிக்கும் இன்பங்கள் அனைத்தும் கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் பரிசுத்தமாகஇருப்பதற்கும் ஆகும்.


கடவுளின் விருப்பம் - தேவனுடைய சித்தத்தின் படி "சுவிகார புத்திரர்" என்பது அவருடைய ஞானத்தைப் பெற்றுக் கொண்டு நாம் அவருடைய திட்டங்களையும் புரிதல்களையும் அறிந்து கொள்வதற்கே என்று பவுல் விளக்குகிறார்.


'அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். காலங்கள் நிறைவேறும்போதுவிளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளேகூட்டப்படவேண்டுமென்று, ' எபேசியர் 1:8-9


உலகில் புனிதமானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வாழ்வதற்கும் சாத்தானின் திட்டங்களை அறிந்து கொள்வதற்கும், பாவத்தின் வலையில் விழாமல் இருக்கும்படி நம்மைக் காத்துக்கொள்வதற்கும் ஞானமும் புரிதலும் நமக்குவழங்கப்பட்டுள்ளன.


விசுவாசிகள் பரிசுத்தத்தில் வளர்வதைக் காண்பதில் கடவுள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இதை பிலிப்பியர் 2: 13 ல்வாசிக்கிறோம்.


'ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில்உண்டாக்குகிறவராயிருக்கிறார். ' பிலிப்பியர் 2:13


 

சுவிகார புத்திரர் - நற்குணங்கள்


நீங்கள் கண்ணாடியில் உங்களையோ அல்லது உங்கள் பாவனைகளையோப் பார்த்தால், உங்கள் தந்தை, தாய் அல்லதுதாத்தா பாட்டிகளின் பல சாயல்களை உங்களிடத்தில் காணலாம். இதேபோல் நாம் கடவுளின் பிள்ளைகள் என்று நம்மை அழைத்துக் கொள்வோமென்றால் , பின்வரும் இந்த 6 நற்குணங்கள் நமக்குத் தேவை.


  1. வேலைக்காரன் அணுகுமுறை

  2. தாழ்மையான அணுகுமுறை

  3. கடவுளின் கிருபை

  4. கடவுளின் ஞானம்

  5. கடவுளிடம் விசுவாசம்̀

  6. கடவுளிடம்அன்பு

1. வேலைக்காரன் அணுகுமுறை - இயேசு நம்முடைய எஜமானர். அவரிடம் நமக்கு வேலைக்காரர் போன்ற ஒருமனப்பான்மை இருக்க வேண்டும். அந்த மனப்பான்மையை நாம் வாழும் உலகத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.(எஜமானர் / ஊழியர்கள் உறவு) - ஊழியர்கள் தங்கள் எஜமானருக்குக் கீழ்ப்படிகிறார்கள். தங்கள் எஜமானரை சார்ந்துஇருக்கிறார்கள். எஜமானரிடம் இருந்து ஊதியத்தைப் பெறுகிறார்கள். அதைவைத்து உலகில் உள்ள அனைத்தையும்பெற்றுக்கொள்கின்றார்கள் (உணவு, உடைகள், தங்குமிடம் மற்றும் பிற காரியங்களுக்கு..). ஒரு ஊழியன் எவ்வளவுஉண்மையுள்ளவர், நேர்மையானவர் என்பதை அடிப்படையாகக் கொண்டு எஜமானர் அவருக்கு போனசு / வெகுமதிஅளிக்கிறார்.


நம்முடைய உலக எஜமானர்கள் இவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருந்தால், நம்முடைய கடவுளைக் குறித்து சற்றுசிந்தித்துப் பாருங்கள். அவர் நம் உலக எஜமானர்களை விட மிகவும் இரக்கமுள்ளவர். நமக்கு என்ன தேவை என்பதைஅறிவார், அவர் நம்மை கவனித்துக்கொள்வார். ஆகவே எல்லாவற்றிற்கும் இயேசுவைச் சார்ந்து, அவர் என்ன செய்யச்சொல்கிறாரோ அதைக் கடைபிடியுங்கள். நீங்கள் எந்த சூழ்நிலைக்குச் சென்றாலும், ஒரு உண்மையுள்ளவேலைக்காரன் என்ற மனப்பான்மையை அவரிடம் காட்டுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.


'ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என்ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். ' யோவான் 12:26


2. தாழ்மையான அணுகுமுறை: கடவுள் பெருமையை எதிர்க்கிறார். நம்மில் ஒரு தாழ்மையான மனப்பான்மை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். கலாத்தியர் 6: 4-ல் , நாம் நம்முடைய சொந்த செயல்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும், பெருமை நமக்கு வரக்கூடாது. இந்த உலகில் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்கின்ற ஆசை இல்லாமல்இருக்கவேண்டும், கடவுள் கொடுத்தது போதும் என்ற மனது இருக்கவேண்டும். நம் வாழ்வில் ஒவ்வொரு காரியமும்கடவுளிடத்தில் இருந்தே பெற்றுக்கொண்டோம் என்கின்ற சிந்தை நம்முடைய வாழ்க்கையில் இருக்கவேண்டும் .


அநேக நேரங்களில் சாத்தான் நாம் வைத்து இருக்கும் எல்லா செல்வமும் நம்முடைய சுயத்தின் நிமித்தம் என்றுநம்மைத் தூண்டி பெருமை குணத்தைக் கொண்டு வருவான். நீங்கள் கடவுளை சார்ந்து இருக்கும்போது உங்களுக்குஅந்த சிந்தை வராது.


ஒருவர் உங்களிடத்தில் பெருமையாக பேசினால் அமைதியாகக் கேட்டுக் கொள்ளுங்கள், திரும்பி பேசி உங்கள்பெருமையை வெளியே சொல்லாமல் இருங்கள்


'அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையேபார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். ' கலாத்தியர் 6:4


3. கடவுளின் கிருபை : மனிதர்களை உருவாக்குவதற்கான கடவுளின் நோக்கம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதே, ஆனால் நம்முடைய சுயத்திற்கும் , ஆவிக்கும் இடையிலான போராட்டங்களால் நாம் பாவம் செய்கிறோம். நாம் பாவம்செய்தவுடன், நம்மை அந்த பாவத்தின் படி தண்டியாமல் இரங்கி, நாம் பரிசுத்தவனாகும் படிக்கு கடவுள் நமக்கு இந்த“கிருபையை” கொடுத்திருக்கிறார்.


நாம் அவரிடத்தில் வந்து உள்ளத்தின் ஆழத்தில் இருந்து மனந்திரும்புதலைக் கேட்டால் இன்னொரு வாய்ப்பைஅளிக்கிறார். நம்முடைய பாவத்தில் இருந்து கழுவி நம்மை விடுவிப்பார். நம்மை பரிசுத்தத்தின் பாதையில் அழைத்துச்செல்லும் இந்த கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


'அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்குஉண்டாயிருக்கிறது. ' எபேசியர் 1:7


4. கடவுளின் ஞானம்: கடவுளின் நோக்கம் நாம் பரிசுத்தராக இருக்கவேண்டும். ஆனால் சாத்தான் தனது பாவமானதிட்டங்களால் நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறான். அவனுடைய திட்டங்களை நமக்கு வெளிப்படுத்த கடவுள் தம்முடையஞானத்தை நமக்குத் தருகிறார். சாத்தானுக்கு எதிரான போர்களைப் போராட அவர் நமக்கு ஞானத்தைக் கொடுத்து நம்மைப் பலப்படுத்துவார்..


'உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய்இப்பொழுது தெரியவரும் பொருட்டாக, இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளேஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக்காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ' எபேசியர் 3:10-11


5. கடவுளிடம் விசுவாசம்: விசுவாசம் ஒரு முக்கியமான குணமாக கடவுள் தம்முடைய பிள்ளைகளிடத்தில்எதிர்பார்க்கிறார்̀. மனிதர்களாகிய நாம் கண்ணில் காணும் விஷயங்களை மட்டும் தான் நம்புகிறோம், ஆனால் இயேசுவிசுவாசத்தைக் குறித்து சொல்லும் வரையறை உலக வழக்கிற்கு மாறானது.


'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. ' எபிரெயர் 11:1


கஷ்டத்தின் போது இயேசுவினிடத்தில் விசுவாசம் இருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். அவர் நம்மை ஒருநாளும் கைவிட மாட்டார், நமக்கு கண்டிப்பாக உதவுவார், நமக்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பார். கடவுள்மீது விசுவாம்என்பது - நாம் எதிர்கொள்ளும் நிலைமை நமக்கு எதிராக இருக்கும்போது கடவுளை நம்புவது, ஒரு வேளை எல்லாம்நமக்கு எதிர் மறையாக நடந்தாலும், கடவுள் மீது உள்ள விசுவாசம் நமக்கு மாறக்கூடாது. எந்த சூழ்நிலையிலும்கர்த்தர் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.


கஷ்டத்தின் மத்தியில் நாம் எவ்வளவு அதிகமாக அவரை நம்புகிறோமோ, அந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வர அவர்சகிப்புத்தன்மையை அளிப்பார். மேலும் விடாமுயற்சியுடன் அந்த சூழ்நிலையை சந்திக்க நமக்குப் பெலனைத் தருவார். நாம் தாங்கும் அளவிற்கு தான் ஆண்டவர் நமக்கு ஒரு கஷ்டத்தைத் தருவார். வெகு சீக்கிரம் நமக்கு ஒரு வழியைக் காண்பிப்பார்.


'இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகியஇயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும்மேன்மைபாராட்டுகிறோம். 'ரோமர் 5:1,3-4


6. கடவுளிடம் அன்பு : கடவுள் மீது அன்பு என்பது முக்கியமான ஒன்றாகும். நமக்கு கடவுள் மீது அன்பும், மற்றவர்களுடன்அன்போடு சேவை செய்வதற்கான அணுகுமுறையும் இல்லையென்றால், மற்ற எல்லாம் ஒரு பொருட்டல்ல. இது 1 கொரிந்தியர் 13 இல் விளக்கப்பட்டுள்ளது, கடவுளின் அன்பைப் பற்றிய எனது முந்தைய இடுகையான “அகபே” படியுங்கள். அதில் இதைக் குறித்து விரிவாகப் படிக்கலாம்.


'எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. ' 1 கொரிந்தியர் 13:3


'எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். ' 1 பேதுரு 4:8



 

சுருக்கம்


  • உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே கடவுள் நம்மைத் தேர்ந்தெடுப்பதை நினைவில் வையுங்கள், அவருடையநோக்கம் நம்மை பரிசுத்தமாகவும், குற்றமற்றவராகவும் ஆக்குவதுதான்.

  • கிறிஸ்துவின் சீஷர்கள் (கிறிஸ்தவர்கள் ) என்று நம்மை நாம் அழைத்தால், கிறிஸ்து இயேசுவின் மூலம் நாம் சுவிகாரபுத்திரர் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

  • இந்த 6 நற்குணங்களை நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவிடம் ஜெபிப்போம்.

  • உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பின்தங்கியுள்ள நற்குணங்கள் என்ன என்பதைக் காட்டவும், பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்ற அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற ஆண்டவர் அதை உங்களுக்கு அதிகமாகத் தர வேண்டியும் கடவுளிடம் கேளுங்கள்.



184 views0 comments

Recent Posts

See All
bottom of page